sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சாப்ட்வேர் டெவலப்பர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர்

/

சாப்ட்வேர் டெவலப்பர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர்

சாப்ட்வேர் டெவலப்பர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர்

சாப்ட்வேர் டெவலப்பர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர்


டிச 13, 2014 12:00 AM

டிச 13, 2014 12:00 AM

Google News

டிச 13, 2014 12:00 AM டிச 13, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாப்ட்வேர் டெவலப்மென்ட் செயல்பாட்டினுடைய பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய நபர், சாப்ட்வேர் டெவலப்பர் என்று அழைக்கப்படுகிறார். இவரை, சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் அழைக்கலாம்.

ஆராய்ச்சி, வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் சாப்ட்வேர் டெஸ்டிங் போன்ற பலவிதமான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும் அவர்களின் பணி. ஒரு சாப்ட்வேர் டெவலப்பர், டிசைன், கம்ப்யூட்டர் புரோகிராமிங் அல்லது சாப்ட்வேர் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் பங்கு பெறலாம்.

உள்ளடக்க நிலை(component-level) அல்லது தனிப்பட்ட புரோகிராமிங் இலக்குகள் ஆகியவற்றைவிட, அப்ளிகேஷன் நிலையில், ஒரு புராஜெக்டின் சரிபார்த்தல் பணியில் சாப்ட்வேர் டெவலப்பர் ஈடுபடலாம். இவர்கள், பொதுவாக, தலைமை புரோகிராமரால் வழி நடத்தப்படுகிறார்கள் என்றாலும், அவர்களின் பணிநிலை என்பது, ப்ரீலேன்ஸ் சாப்ட்வேர் டெவலப்பர் என்பதையும் உள்ளடக்கியது.

சாப்ட்வேர் டெவலப்பர் என்பவரின் பணி

சாப்ட்வேர் டெவலப்பர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சாப்ட்வேர் அமைப்புகளின் டிசைன், இன்ஸ்டாலேஷன், டெஸ்டிங் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளுக்கு பின்னால் இருப்பவர்கள் இவர்களே.

பொறுப்புகள்

* பகுப்பாய்வு, பிரச்சினை கண்டறிதல், தேவைகள், தீர்வுகளை மேம்படுத்துதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் ஆகியவற்றை ஆய்வுசெய்து, அதன்மூலம் இயக்க சாத்தியக்கூறுகளை வரையறுத்தல்.

* டாகுமென்டேஷன், ப்ளோசார்ட்ஸ், லேஅவுட்ஸ், டயகிராம்ஸ், சார்ட்ஸ், codecomments மற்றும் கிளியர்கோட் ஆகியவற்றை டெவலப் செய்வதன்மூலம், தீர்வுகளை நிறுவுதல்.

* சிஸ்டம்ஸ் விவரங்கள், தரநிலைகள் மற்றும் புரோகிராமிங் ஆகியவற்றை வடிவமைத்தல் மற்றும் நிர்ணயித்தல் ஆகியவற்றின் மூலமாக, தீர்வுகளை தயார்படுத்துதல் மற்றும் நிறுவுதல்.

* கொள்கைகள் மற்றும் செயல்முறைகளில் மாற்றங்களைப் பரிந்துரைத்தல், சிஸ்டம்ஸ் பகுப்பாய்வை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் இயக்கத்தை மேம்படுத்தல்.

* விற்பனையாளர்களிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறுதல், வாங்குவதற்கு பரிந்துரை செய்தல், தயாரிப்புகளை சோதித்தல் மற்றும் அங்கீகரித்தல் ஆகியவற்றின் மூலம் சாப்ட்வேரை பெறுதல் மற்றும் அங்கீகரித்தல்.

* State-of-the-art மேம்பாட்டு உபகரணங்கள், புரோகிராமிங் நுட்பங்கள், கம்ப்யூட்டிங் உபகரணம் ஆகியவற்றை ஆய்வு செய்தல், கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், நிபுணத்துவ வெளியீடுகளை(publications) படித்தல், தனிப்பட்ட நெட்வொர்க்குகளை பராமரித்தல், நிபுணத்துவ அமைப்புகளில் பங்கு பெறுதல் போன்றவைகளின் வாயிலாக பணி தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ளுதல்.

* தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்வதன் மூலம், இயங்குதலைப் பாதுகாப்பது.

* மேம்பாட்டு மற்றும் சேவை அம்சங்களை இணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் சேகரித்தல் ஆகியவற்றின் மூலமாக தகவல்களை அளித்தல்.

இப்பணிக்குத் தேவைப்படும் திறன்கள்

தகவல்களை பகுப்பாய்வு செய்தல்
பொது புரோகிராமிங் திறன்கள்
சாப்ட்வேர் டிசைன்
சாப்ட்வேர் பிழை சரிசெய்தல்
சாப்ட்வேர் ஆவணப்படுத்தல்
சாப்ட்வேர் டெஸ்டிங்
பிரச்சினை தீர்த்தல், குழுப் பணி
சாப்ட்வேர் டெவலப்மென்ட் அடிப்படைகள்
சாப்ட்வேர் டெவலப்மென்ட் செயல்முறை

இத்துறையில் நுழைதல்

பெரும்பாலான நிறுவனங்கள், சாப்ட்வேர் டெவலப்பராக பணிபுரிய விரும்பும் ஒருவர், தொடர்புடைய கம்ப்யூட்டிங் தகுதியையோ அல்லது பட்டத்தையோ வைத்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றன. அதேசமயம், சில நிறுவனங்கள், AS நிலைகளில் இருப்பவர்களுக்கு, பயிற்சி புரோகிராம்களை நடத்துகின்றன.

நீங்கள் ஒரு பட்டதாரியாக இருந்து, அதேசமயம், அந்தப் பட்டம், ஐ.டி. துறை சாராததாக இருப்பின், நீங்கள் graduate trainee scheme -க்கு விண்ணப்பிக்கலாம் அல்லது முதுநிலை conversion படிப்பை மேற்கொண்டு, தேவையான திறன்களைப் பெற்றுக் கொள்ளலாம். Java, C++, Smalltalk, Visual Basic, Oracle, Linux and NET, PHP போன்ற அம்சங்கள், ஒரு சாப்ட்வேர் டெவலப்பருக்கு தெரிந்திருக்க வேண்டுமென அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.

இப்படிப்பை எங்கு மேற்கொள்ளலாம்?

சாப்ட்வேர் டெவலப்மென்ட் படிப்பு, இந்தியாவெங்கும் பல்வேறான கல்வி நிறுவனங்களில், பரவலாக வழங்கப்படும் ஒரு படிப்புதான். அதேசமயம், புகழ்பெற்ற ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படித்தால், அதற்கு முக்கியத்துவம் அதிகம்.

படிப்பின் வகைகள்

இத்துறை தொடர்பாக பல்வேறு விதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவை,

B.A Computer Science
B.C.S Computer applications
BE + MBA Computer Science and Engineering
B.Sc. Computer Applications
B.Sc. Computer Technology
B.Sc. Computer Science Statistics
B.Sc. + M.Sc. Computer Science Applications
B.Tech. Computer and Information Science
M.Tech. Mathematics and Computing

சம்பளம்

இத்துறையில், சம்பளத்தைப் பொறுத்தவரை, பொதுவாக, குறையிருப்பதில்லை. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், சம்பளத்தின் பொருட்டே, இத்துறையை நோக்கி செல்வோர் மிக அதிகம்.
குறைந்தபட்ச சராசரி சம்பளமாக, ஒரு மாதத்திற்கு, ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெறலாம்.

எதிர்கால வாய்ப்பு

நல்ல வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட துறைகளில், இத்துறை முக்கியமான ஒன்று. நல்ல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு, அதிக சம்பளத்தில், பெரிய நிறுவனங்களில், பணி வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கும்.
உலகளவில், அதிக சம்பளம் பெறும் நபர்களாக, கம்ப்யூட்டர் இன்ஜினியர்களும், சாப்ட்வேர் டெவலப்பர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் தங்களின் நிலையைத் வைத்துக்கொள்ள, அதிக அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் தர வேண்டியுள்ளது.






      Dinamalar
      Follow us