sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

பிரச்சனைகளை தீர்ப்பதுதான் மகிழ்ச்சி!

/

பிரச்சனைகளை தீர்ப்பதுதான் மகிழ்ச்சி!

பிரச்சனைகளை தீர்ப்பதுதான் மகிழ்ச்சி!

பிரச்சனைகளை தீர்ப்பதுதான் மகிழ்ச்சி!


ஜன 20, 2015 12:00 AM

ஜன 20, 2015 12:00 AM

Google News

ஜன 20, 2015 12:00 AM ஜன 20, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெயிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். ஆனால், ஜெயிப்பதற்கு தேவையான முயற்சி எடுக்கிறோமா?

‘முடிந்தவரை முயற்சிப்பது அல்ல முயற்சி‘
முடிக்கும்வரை முயற்சிப்பதே முயற்சி‘

உங்களிடமிருந்து வெளியே வாருங்கள்; நம்மில் பலர், நமக்குள்ளேயே வாழக் கற்றுள்ளோம். அதிலிருந்து வெளிவந்தால் வாழ்வில் சிறப்படையலாம், வெற்றி பெறலாம். முதலில் முயற்சி செய்யுங்கள். பிறகு, கடினமாக முயற்சி செய்யுங்கள். அதைவிட இன்னும் கடினமாக முயலுங்கள். அப்போது முயற்சியின் பயன் கூடும். கூடிக்கொண்டே போகும்...

கூட்டு வட்டி எவ்வாறு அதிகமாக பெருகுகிறதோ, அதுபோல தொடர்ந்து செயல்படும் முயற்சியின் பயன்களும், அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். முயலுதல் என்பது தொடர் பயணம். தொடர்ந்து பயணம் செய்தால், அதுதான் நமது வெற்றிப் பயணம்.

எது மகிழ்ச்சி?

‘ஒரு திறமை கூட இல்லாத மனிதன் யாரும் உண்டா?‘ இல்லை!

ஒவ்வொரு மனிதனிடமும் விலைமதிக்க முடியாத வைரம் போன்ற சில திறமைகள் உள்ளன. நம் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்த வேண்டும். அதோடு நிற்காமல், அத்திறமைகளை சரியான நேரத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

இன்றைய உலகம் ஒரே கிளர்ச்சிமயமாக இருக்கிறது. நாடுகளிடையே பிரச்சனைகள், மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள், இப்படி உலகம் முழுவதும் பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. பிரச்சனை இல்லாத உயிரினம் இருக்க முடியாது. பிரச்சனைகள், நமது முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாகவும் அமைகிறது!

பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்பதில்லை. கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதுதான் மகிழ்ச்சி.

தீர்வு என்ன?

எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. கல்வி என்பது ஆராய்ந்து அறியும் திறனை உங்களுக்கு கொடுக்கும். எனவே, கல்வியில் உயருங்கள். கல்வி உங்களை உயர்த்தும். உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை உணர்வுகளை எடுத்து குப்பையில் போடுங்கள்.

உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை ஆராய்ந்து பாருங்கள். அந்த ஆற்றலைப் பெரிதாக வளருங்கள். உங்களுக்குள், தன்னம்பிக்கையும், தனித்திறமையும் அடங்கி இருந்தால், நிச்சயம் நீங்கள் மேலும் மேலும் உயருவீர்கள்!

நீங்கள் விரும்பாததைப் பற்றி சிந்தித்து, ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள். தொடர் தோல்வி வந்தாலும் களங்காதீர்கள். ‘மிகவும் இருண்டு விடுகின்றபோது, நட்சத்திரங்கள் வெளிவருகின்றன. காரியத்தை செய்யுங்கள், சக்தி தானாக வரும்.

வானத்தில், வல்லூறுகளுடன் வட்டமிட்டுப் பறக்க ஆசைப்பட்டால், வான்கோழிகளோடு ஒட்டிக்கொண்டு இருக்காதீர்கள். உயரமாக நில்லுங்கள்...

-சரஸ்வதி






      Dinamalar
      Follow us