/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
எம்.பி.ஏ., படிப்பில் மாணவர் பரிமாற்ற திட்டம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
/
எம்.பி.ஏ., படிப்பில் மாணவர் பரிமாற்ற திட்டம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
எம்.பி.ஏ., படிப்பில் மாணவர் பரிமாற்ற திட்டம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
எம்.பி.ஏ., படிப்பில் மாணவர் பரிமாற்ற திட்டம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
பிப் 26, 2014 12:00 AM
பிப் 26, 2014 12:00 AM
இரு கல்வி நிறுவனங்களுக்கிடையே ஏற்படும் கல்வி ஒப்பந்தங்களின் விளைவாக ஏற்படுவதுதான் மாணவர் பரிமாற்ற திட்டங்கள். நடைமுறை பயிற்சிகள் மற்றும் மாறும் பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குவதுதான் இந்த பரிமாற்ற நிகழ்வின் நோக்கம்.
மேலும், மாணவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ, அந்த நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றிய அறிவைத் தருவதும் இத்திட்டத்தின் ஒரு அங்கம். மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சியில் அதில் பங்கேற்கும் மாணவர்கள், தாங்கள் செல்லும் நாடுகள் அல்லது நகரங்களில் பல்வேறான இடங்களில் தங்குகிறார்கள். விடுதிகள், அப்பார்ட்மென்ட்டுகள் அல்லது மாணவர் லாட்ஜ் உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும்.
படிப்பிற்கான செலவானது, செல்லக்கூடிய நாடு மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. தாங்கள் தங்குவதற்கான செலவினங்களை, மாணவர்கள், உதவித்தொகைகள், லோன் அல்லது தங்களின் சொந்த பொறுப்பு ஆகியவற்றின் மூலம் ஈடு செய்கின்றனர்.
பொதுவாக மாணவர் பரிமாற்ற நிகழ்வு என்பது, ஒரு மாணவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் மற்றும் அவர் குறிப்பிட்ட வணிகப் பள்ளியில் சேர்ந்ததன் நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்து ஒருவருக்கு நன்மையளிக்கிறது. பலருக்கு அதுவொரு நல்ல சுற்றுலா அனுபவமாக அமைகிறது. அதேசமயம், பல மாணவர்களுக்கு இப்பரிமாற்ற நிகழ்வு திருப்தி அளிப்பதாய் உள்ளது.
ஒரு மாணவர், பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்க முடிவு செய்வதற்கு முன்னதாக, அதிலிருக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு செமஸ்டர் காலகட்டம் மட்டுமே, இந்த பரிமாற்ற நிகழ்வு தொடர்பாக ஒரு மாணவர் வெளிநாட்டில் தங்கியிருக்க முடியும்.
எனவே, அந்தக் குறுகிய காலகட்டத்தில், ஒருவர் எந்தளவு கற்றுக்கொள்ள முடியும் என்பதை, அதிலும் குறிப்பாக, பிராக்டிகல் அனுபவத்தை அவர் எந்தளவு பெற முடியும் என்பதை தெரிந்துகொள்வது நல்லது.
ஏனெனில், பல வெளிநாடுகள், பரிமாற்ற நிகழ்வின்போது, மாணவர்களை, புராஜெக்ட் தொடர்பாக பணிபுரிய அனுமதிப்பதில்லை. எனவே, பணி அனுபவம் என்பது பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்களின் விருப்பமாக பெரும்பாலும் இருப்பதில்லை என்பதை நம் மூளையில் இருத்திக் கொள்வது நன்மை பயக்கும். எனவே, மேற்கண்ட அம்சங்களின் அடிப்படையிலேயே ஒருவர் தனது படிப்பை தேர்வுசெய்தல் வேண்டும்.
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படிப்பதற்கான சிறந்த எம்.பி.ஏ., உதவித்தொகை விபரங்கள் எவை?
அதிகளவிலான உதவித்தொகை வாய்ப்புகள் உள்ளன என்பதை மறக்க வேண்டாம். பல்வேறான வணிகப் பள்ளிகளில், திறமையான மாணவர்களுக்கு, இயல்பாகவே மெரிட் அடிப்படையிலான உதவித்தொகைகள் கிடைத்து விடுகின்றன.
மதிப்பாய்வு கமிட்டியானது, ஒரு மாணவரின் கல்விப் பின்புல வலிமை, ஜிமேட் மதிப்பெண்கள், படிப்பு சாதனைகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றை திறனாய்வு செய்து அதற்கேற்ப முடிவு செய்கிறது.
வெளிநாட்டில் படிக்கும்போது, கட்டண சலுகை என்பது, கல்லூரிக்கு கல்லூரி, நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மேலாண்மைப் படிப்பிற்கான வெளிநாட்டு உதவித்தொகை தொடர்பாக கல்விமலர் இணையதளத்தில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, அவற்றை மாணவர்கள் விரிவாகவும், கவனமாகவும் படித்து விபரம் அறிந்து, அதற்கேற்ப முடிவு செய்யவும்.

