தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/'200 முறை தேர்வு எழுதுங்கள்'

'200 முறை தேர்வு எழுதுங்கள்'

'200 முறை தேர்வு எழுதுங்கள்'


ஜூன் 19, 2026 03:21 PM

ஜூன் 19, 2026 03:21 PM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 19, 2026 03:21 PM ஜூன் 19, 2026 03:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு மாணவரும் தேர்வுகளில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் சிறந்து விளங்க 'வலுவான அடித்தளம்' பேருதவி புரிகிறது.

அதேவேளை, ஒவ்வொரு பாடத்திலும் வலுவான அடித்தளத்தை உருவாக்கவும், ஆழமான புரிதலை உறுதிசெய்யவும், வாராந்திர தேர்வுகள், முழுமையான தேர்வுகள் மற்றும் பகுதி தேர்வுகள் என 200க்கும் மேல் தேர்வுகள் எழுதி பயிற்சி பெற வேண்டும். மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் புரிந்துகொண்டு, பிழையின்றி தேர்வு எழுத இத்தகைய தேர்வுகள் உறுதுணையாக அமையும்.

பாடம் கற்பிக்கும் 'தோல்வி'

இரண்டாவது முக்கிய அம்சம், சரியான மனநிலையைக் கொண்டிருத்தல்; குறிப்பாக, தோல்வியும் ஒரு சிறந்த பாடத்தைக் கற்றுக்கொடுப்பதால், மாணவர்கள் தங்கள் தோல்விகளை புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் பெரும்பாலும் 'அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும்' என்ற மனநிலையிலேயே வளர்க்கப்படுகிறார்கள். அதனால் தேர்வில் சிறந்து விளங்காதபோது அவர்கள் எதிர்மறையான, மன அழுத்தம் நிறைந்த நிலைக்கு செல்லக்கூடும்.

அதற்கு பதிலாக, ஒரு தேர்வு தங்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது, அதன் முடிவு என்ன மற்றும் தோல்விகளிலிருந்து எவ்வாறு முன்னேறுவது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை தணிக்க மூச்சு பயிற்சிகள் மற்றும் குறிப்பு எழுதுதல் போன்ற நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளின் லட்சியங்கள் மற்றும் விருப்பங்களை பெற்றோரும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

விழிப்புணர்வு அவசியம்


ஏ.ஐ.,யை எந்த அளவிற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். உதாரணமாக, மூன்று பாடப்பகுதிகளைக் கொண்ட ஒரு தேர்வுக்கு தயாராகும் மாணவர், அப்பகுதிகளைப் பகுப்பாய்வு செய்யவும், வரக்கூடிய கேள்விகளை ஊகிக்கவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம்.

தேசிய கல்விக் கொள்கை, மதிப்பெண்களுக்கு மட்டுமல்லாமல், முழுமையான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தாய்மொழியை புரிந்துகொண்டு கற்றல், கட்டாய வாழ்க்கைத்திறன் செயல்பாடுகள், ரோபோட்டிக் ஆய்வகங்கள் மற்றும் கட்டாய யோகா ஆகியவை வரவேற்கத்தக்க அம்சங்கள்.

'ஏ.ஐ.,யால் மிஞ்ச முடியாது'


செயற்கை நுண்ணறிவால், மனித அறிவையோ அல்லது படைப்பாற்றலையோ மிஞ்ச முடியாது.
- ஷரணி பொங்குரு, இயக்குநர், நாராயணா கல்வி நிறுவனங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us