செப் 01, 2025 12:00 AM
செப் 01, 2025 12:00 AM

மாணவ, மாணவிகளிடம் அறிவியல் மற்றும் கணித துறைகளில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'ஒலிம்பியார்டு' தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. அதேபோல், தமிழகம் முழுதும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில், சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது.
உதவித்தொகை:
இத்தேர்வு வாயிலாக 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வாயிலாக, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் தலா 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
இத்தேர்வில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மற்றும் அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வின் வாயிலாக, அரசு பள்ளிகளில் இருந்து 50 சதவீதம் பேரும், இதர பள்ளிகளில் இருந்து 50 சதவீதம் பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://apply1.tndge.org/dge-notification/TTSE எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன், விண்ணப்பக் கட்டணம் ரூ.50 சேர்த்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விபரங்களுக்கு:
www.dge.tn.gov.in