தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெற்றிக்கு தேவை ‘மாற்றுச் சிந்தனை’!

வெற்றிக்கு தேவை ‘மாற்றுச் சிந்தனை’!

வெற்றிக்கு தேவை ‘மாற்றுச் சிந்தனை’!


பிப் 01, 2016 12:00 AM

பிப் 01, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 01, 2016 12:00 AM பிப் 01, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெற்றிக்கான திறவுகோல் நம்மிடம் தான் உள்ளது. சாவியை கைகளில் வைத்து கொண்டு, எந்த முயற்சியும் எடுக்காமல் , வெற்றிக்கதவுகள் திறக்கவில்லை என்று வருத்தம் கொள்வதல் நியாயம் இல்லை!

‘என்னை விட சுமாராக படிப்பவன், என் வகுப்பிலே கடைசி ராங்க் எடுத்தவன் கூட போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு சென்றுவிட்டான்’,  என்று ஆதங்கம் கொள்கின்றோம். ‘நான் எவ்வளவு தான் தேர்வு எழுதினாலும் என்னால் வெல்ல முடியவில்லை. எனக்கு அதிர்ஷ்டம் இல்லை’. இப்படி சொல்வதற்கு, கொஞ்சம் கூட நாம் சிந்திப்பதில்லை. அது தான் நம் பிரச்சனையே!

வெற்றி பெற்றவர்கள் நம்மை விட வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். ஆம்! சிந்தனை தான் மனிதனை உயர்ந்த நிலையை அடைய செய்யும் மந்திர சாவி. நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனை என்று கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், பக்கவாட்டு சிந்தனை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?

ஞானப்பழத்தை பெற உடனே மயிலில் உலகை வலம் வர சென்ற முருகனின் சிந்தனை நேர்மறையாக இருந்தாலும், அப்பா, அம்மாவை சுற்றி வந்த விநாயகரின் சிந்தனையிலும், செயலிலும் உள்ள நியாயமே அவருக்கு ஞானப்பழத்தை பெற்றுத்தந்தது. அந்த நியாயமான சமயோசித யோசனையே, பக்கவாட்டு சிந்தனை!

மாந்தோப்பு வைத்துள்ள ஒருவன், வழிப்போக்கர்கள் மாம்பழம் பறித்து செல்வதில் இருந்து, தன் தோப்பை காப்பாற்ற எண்ணினான். ஆகவே, ஒரு நாய் வாங்கி தோட்டத்தில் கட்டி போட விரும்பினான். பட்டணத்திற்கு சென்று அதிக விலை கொடுத்து நாய் ஒன்றை வாங்கி வந்தான். அதனை கொண்டு வந்த பின்புதான் தெரிந்தது, அந்த நாய் ஊமை என்பது!

அவரது மகன் “அப்பா, கவலையை விடுங்க!” என்றபடி கையில் ஒரு அட்டையில் எதையோ எழுதி தோப்பின் பிரதான கதவில் மாட்டி விட்டான். அதன் பின் எவரும் அவருடைய தோட்டத்தில் மாங்காய்களை பறிக்க முயற்சி கூட மேற்கொள்ளவில்லை.

அப்படி என்ன யோசனை? அது தான் மாற்றுச் சிந்தனை! அவன் எழுதிய அட்டையில் இடம் பெற்றிருந்த வாசகம் இதுதான் “இந்த நாய் குரைக்காது; கடிக்கும்”!

வெற்றிக்கு சிந்திப்போம். அடுத்தவர்களை கெடுக்காமல், நம்மை உயர்த்தி, எல்லோருக்கும் நன்மைத்தரக்கூடிய மாற்றுச் சிந்தனையுடன் வாழ முயற்சிப்போம்!

-க.சரவணன், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us