/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
/
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
ஆக 13, 2025 12:00 AM
ஆக 13, 2025 12:00 AM

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கடந்த 2003ம் ஆண்டு முதல் திறந்த நிலை கல்வி முறையில் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.
இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., - தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், அரசியலமைப்பு அறிவியல்
பி.எஸ்சி., - கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல்
பி.காம்.,
பி.சி.ஏ.,
பி.பி.ஏ.,
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., - தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், அரசியலமைப்பு அறிவியல், குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம்
எம்.எஸ்சி., - கணிதம், உளவியல், புவியியல், விலங்கியல், இயற்பியல், தாவரவியல்
எம்.காம்.,
எம்.எஸ்.டபிள்யு.,
எம்.பி.ஏ.,
டிப்ளமா படிப்புகள்:
தொல்லியல், வன உயரின சுற்றுலா, இதழியல், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய கல்வி, ஊடகக்கலை, சிலம்பம், மனித உரிமைகள், சர்வதேச தொடர்பு, ஆராய்ச்சி மற்றும் பல்வேறு படிப்புகள்
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற துறைக்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் 12ம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு டிப்ளமா அல்லது இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர, தொடர்புடைய துறையில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா படிப்புகளுக்கு, படிப்பிற்கு ஏற்ப 10ம் வகுப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://tnouportal.in/RegistrationFormAY2025.aspx எனும் இணையதள பக்கத்தில் தேவையான தகவல்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
www.tnou.ac.in