/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கற்கும் திறனுக்கு ஏற்ப பயிற்சி!
/
கற்கும் திறனுக்கு ஏற்ப பயிற்சி!
ஆக 20, 2025 12:00 AM
ஆக 20, 2025 12:00 AM

இன்ஜினியரிங் துறையில் கடந்த 25 ஆண்டு காலத்திற்கு இணையான வளர்ச்சி 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' பயன்பாட்டிற்கு வந்த கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.
ஏராளமான தொழில் துறைகளில் ஏ.ஐ., பயன்படுத்தப்பட்டு வருவதோடு, ஏ.ஐ., சார்ந்த மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன. அதற்கேற்ப தொழில் துறைக்கு இணையான ஆய்வகங்களையும், நவீன வசதிகளையும் எங்கள் கல்வி நிறுவனத்திலேயே மாணவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறோம்.
பள்ளிகளில் பல்வேறு கல்வி மற்றும் குடும்ப சூழல்களில் படித்து கல்லூரிகளுக்கு அடியெடுத்துவைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உயர்கல்வியை வழங்குவது சரியானதாக இருக்காது. ஆகவே தான், மாணவர்களின் தனிப்பட்ட கற்கும் திறனை பொறுத்து, அவர்களுக்கு முதலாம் ஆண்டில் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.
முதல் ஓர் ஆண்டுகாலம் அடிப்படைகள் சார்ந்த ஆழமான பயிற்சிகளை வழங்குவதோடு, ஒவ்வொரு மாணவரின் குறிக்கோள் மற்றும் திறனை அறிந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குகிறோம். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதோடு, துறை சார்ந்த 'ஹேக்கத்தான்' போட்டிகளில் அதிகளவில் கலந்துகொள்ளவும் ஊக்கமளிக்கிறோம்.
அனைத்து தொழில் துறைகளிலும் நிகழும் மாற்றங்களை உடனடியாக அறிந்துகொள்ள ஒவ்வொரு துறைகளில் இருந்தும் நிபுணர்களை எங்கள் கல்வி நிறுவனத்திற்கு அழைத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாட செய்கிறோம். அதிகமான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை உருவாக்கும் நோக்கில், ஐ.ஐ.டி., பேராசிரியர்களை எங்கள் கல்வி நிறுவனத்திற்கே நேரடியாக அழைந்துவந்து, மாணவர்களின் தொழில்முனைவு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகளை வழங்க செய்கிறோம்.
கல்லூரியில் சேர்ந்த 4 ஆண்டுகள், மாணவர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்தினால், அடுத்த 40 ஆண்டுகால வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பது போல், நமது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். ஆகவேதான், விளையாட்டு, யோகா மற்றும் தியான பயிற்சிகளில் ஈடுபட அனைத்து மாணவ, மாணவியர்களையும் அறிவுறுத்துகிறோம். கற்கும் பாடங்கள் நினைவில் நீங்காமல் இருக்க தியான பயிற்சி பேருதவி புரிகிறது. 4 மணிநேரம் கற்க வேண்டிய பாடங்களை ஒரு மணிநேரத்தில் கற்கும் திறனும் சாத்தியமாகிறது. படைப்பாற்றல் திறனும், புத்தாக்க சிந்தனையும் மென்மேலும் அதிகரிக்கிறது.
-எஸ்.வி. பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்தியமங்கலம், ஈரோடு.