sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

/

உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!


அக் 16, 2015 12:00 AM

அக் 16, 2015 12:00 AM

Google News

அக் 16, 2015 12:00 AM அக் 16, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் ஆக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வு தான் ‘நெட்’ (நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்)!

உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தே இத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளலாம்.

யார் எழுதலாம்?
தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, அரசியல் அறிவியல், மேலாண்மை என மொத்தம் 99 பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ‘நெட்’ தேர்வு எழுதலாம். மேலும், முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி., படித்தவர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

வயது வரம்பு: உதவி பேராசிரியர் பணியுடன், ஜே.ஆர்.எப்., ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்போர், அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் பணிக்காக மட்டும் விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு விபரம்
ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இத்தேர்வு முற்றிலும் ‘அப்ஜெக்டிவ்’ முறையைக் கொண்டது; மொத்தம் மூன்று தாள்கள். அனைத்து கேள்விகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள். ‘நெகட்டிவ்’ மதிப்பெண்கள் இல்லை.

தாள் 1: ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கேட்கப்படும். இதில் 50 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும்.

தாள் 2: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 50 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

தாள் 3: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 75 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

தேர்வு எழுத, முதல் இரு தாள்களுக்கும் தலா 1.25 மணி நேரம், மூன்றாவது தாளுக்கு மட்டும் 2.50 மணி நேரம் கால அவகாசம் உண்டு. தேர்ச்சி0 பெற ஒவ்வொரு  தாளிலும் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் தகவல்களுக்கு: cbsenet.nic.in






      Dinamalar
      Follow us