sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வெற்றியை பழக்கமாக மாற்றுவதற்கான வழி!

/

வெற்றியை பழக்கமாக மாற்றுவதற்கான வழி!

வெற்றியை பழக்கமாக மாற்றுவதற்கான வழி!

வெற்றியை பழக்கமாக மாற்றுவதற்கான வழி!


ஜன 21, 2015 12:00 AM

ஜன 21, 2015 12:00 AM

Google News

ஜன 21, 2015 12:00 AM ஜன 21, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யும் பணியில் வெற்றியை பழக்கமாக மாற்றிக்கொள்ள எளிய வழி இதோ...

* எந்த தவறான பழக்கங்களை கைவிட வேண்டும் என உணர்தல்

* வெற்றியாளர்போல் பேசுதல், நடந்து கொள்ளுதல், மனதளவில் இருத்தல்

* வெற்றிபெற்றால் என்ன கிடைக்கும்? வெற்றிபெற்றால் எப்படி உணர முடியும்? என்று நினைத்துப் பார்த்தல்

* தோல்வியாளர் மனப்பாங்கினை தவிர்த்தல்

* வெற்றி மீது கவனம் வைத்தல்

* அகமன தூண்டுதலை அதிகரித்தல்

* வெற்றி பெற்றால் பெருமிதம், மகிழ்ச்சி கிடைக்கும் என புரிந்து கொள்ளல்

* எப்போதும் ஆரோக்கியமாக முழுத் திறனோடு இருத்தல்

* இலக்கை உணர்ந்து செயல்படுதல்

* ‘வெற்றிபெற்றால், என்னை நான் மிகவும் நேசிப்பேன், எனக்கு நானே பாராட்டு தருவேன், தவறினாலும் என்னை மன்னிப்பேன்‘ என்று அடிக்கடி சொல்லுதல்

எந்த வேலையையும் தவறாக செய்தாலும், சரியாக செய்தாலும், அதிலிருந்து பெறுவது ஒரு அனுபவம். அந்த அனுபவம்தான் வெற்றிக்கு வழி சமைக்கிறது.

வெற்றிபெற்ற ஒருவர், தனது ஒரு பேட்டியில் சொல்கிறார்;
‘எப்படி எப்போதும் மிகச்சரியாக முடிவெடுத்து வெற்றி பெறுகிறீர்கள்?‘
‘அனுபவம் மூலம்தான்‘
‘அனுபவம் எப்படி கிடைக்கிறது?‘
‘தவறான முடிவுகளால்தான்!‘

வெற்றிதனை தடுப்பது நமது திறன் குறைவு அல்ல, கட்டுப்படுத்தும் நமது அவநம்பிக்கைகளால்தான். அவை நம்மை, எப்படி தனது கட்டுக்குள் வைத்து சிறுமைப்படுத்துகிறது என்பதை உணர்தல் இங்கே அவசியமாகிறது. ஆழ்மனதில் பதிந்துபோகும், கட்டுப்படுத்தும் அவநம்பிக்கைகளை அடித்து வீழ்த்தி, நம்மை மேலே கொணர்வது, ஜெயிக்க வேண்டும் என்ற நமது வேட்கைதான். அப்போது எந்த வேலையும் மலைப்பாக தெரியாது. கலகலப்பாகவே தெரியும்.

மேலும், எந்தவொரு வேலையையும் சிறு சிறு கூறுகளாக(ண்ட்ச்டூடூ ஞிடதணடுண்) துண்டுகளாக்கி பிரித்துக்கொண்டு செயல்படும்போது மலைப்பு வராது.

ஒரு யானையை ஒரே பார்வையில் பார்க்க முடியுமா? முன் பகுதி, பின் பகுதி, பக்கவாட்டுப் பகுதி என்று ஒவ்வொன்றாய் பார்க்கும்போது முழுமையாக பார்க்க முடியும் அல்லவா?

செடிக்கு நீர் விட்டால் மலர் பெறலாம். நெருப்புக்கு சின்ன சின்ன மரத்துண்டு போட்டால் வெப்பம் பெறலாம். வேலையில் தொடர் முயற்சி மூலம் நிச்சய வெற்றி பெறலாம்....!

- டாக்டர்.பால சாண்டில்யன்






      Dinamalar
      Follow us