ஏப் 14, 2026 09:29 PM
ஏப் 14, 2026 09:29 PM

உலகத் தரக் கல்வியை அனைத்து நிலைகளிலும் விரிவுபடுத்தி, தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப திறன் மிக்க, சமூகப் பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்குவதை எங்கள் கல்வி நிறுவனங்கள் இலக்காகக் கொண்டுள்ளன.
தொழில்முனைவு, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை தேவைகளை மையமாகக் கொண்டு பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு, முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து புதுமை மற்றும் கண்டுபிடிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை தொடர்ச்சியான கல்வி வாய்ப்பு வழங்கப்படுவதுடன், இன்டர்ன்ஷிப், தொழில்துறை பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தப்படுகிறது. தேசிய, சர்வதேச கருத்தரங்குகள், பயிலரங்குகள் மூலம் மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதுமைத் திறனில் முன்னேற்றம் காண்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோடிக்ஸ் போன்ற நவீன துறைகள் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆய்வக மற்றும் திட்ட அடிப்படையிலான கற்றல் வலுப்படுத்தப்படுகிறது. தொழில்துறை இணைப்புகள், லைவ் புராஜெக்ட்கள், ஹேக்கத்தான்கள் வாயிலாக மாணவர்களுக்கு செயல்முறை அனுபவம் பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்; சிலர் பன்னாட்டு நிறுவனங்களிலும் இடம்பிடிக்கின்றனர். அதேசமயம், தொழில்முனைவு ஊக்குவிக்கப்பட்டு, ஸ்டார்ட்அப் ஆதரவு, பயிற்சிகள், நிதி வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
பசுமை வளாகம், பல்துறை செயல்பாடுகள், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் முழுமையான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. சமூக சேவை, கிராமப்புற முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் வாயிலாக மாணவர்களின் சமூகப் பொறுப்பு மேம்படுத்தப்படுகிறது.
மொத்தத்தில், வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை உருவாக்குபவர்களாக மாற்றுவதோடு, எதிர்கால மாற்றங்களை வழிநடத்தக்கூடிய தலைமுறையையும் உருவாக்கி வருகிறோம்.
கல்வி என்பது அறிவை அளிப்பதற்கான ஒரு செயல்முறை மட்டுமல்ல; அது சிந்தனையை வடிவமைத்து, பொறுப்புணர்வு கொண்ட தலைமுறையை உருவாக்கும் சக்தி. நவீன உலகின் தேவைகளை உணர்ந்து, கல்வியும் மேலாண்மையும் இணையும் போது தான் உண்மையான முன்னேற்றம் நிகழ்கிறது.
- டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், மேனேஜிங் டிரஸ்டி, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட்.
