தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தொலைநிலைக் கல்வியை எங்கே மேற்கொள்ளலாம்?

தொலைநிலைக் கல்வியை எங்கே மேற்கொள்ளலாம்?

தொலைநிலைக் கல்வியை எங்கே மேற்கொள்ளலாம்?


செப் 30, 2013 12:00 AM

செப் 30, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 30, 2013 12:00 AM செப் 30, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொலைநிலைக் கல்வியை மேற்கொள்ள எந்தப் பல்கலை சிறந்தது? பல பல்கலைகள், UGC அங்கீகாரம் பெற்ற ஒரே படிப்பை வழங்கும்போது, எது சிறந்தது என்பதை எவ்வாறு தேர்வு செய்வது?

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், தொலைநிலை முறையில் ஏராளமான படிப்புகளை வழங்குகின்றன. வழங்கப்படும் படிப்பின் உள்ளடக்கம், கவுன்சிலிங் செஷன்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் அனுபவம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு இடையிலான உரையாடல் வாய்ப்புகள், கற்பித்தல் முறை மற்றும் ஒரு குறிப்பிட்ட பல்கலையின் தொலைநிலை பட்டத்திற்கு, வெளியுலகில் கிடைக்கும் மதிப்பு போன்ற பல அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, சிறந்தது எது என்பது கணிக்கப்படுகிறது.

பொதுவாக, எந்த பல்கலை வழங்கும் தொலைநிலைப் பட்டம் சிறந்தது என்பதை தோராயமாக ஒப்பிட்டு மதிப்பிடுவது கடினம். சம்பந்தப்பட்ட பல்கலைகளின் இணையதளங்களில் சென்று, அந்தந்த பாடங்களின் உள்ளடக்கத்தை ஒப்பிட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். மேலும், நாம் மேற்கொள்ளும் படிப்பானது, UGC அங்கீகாரம் பெற்றதா என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

தொலைநிலைக் கல்விமுறையில், ஆசிரியர் என்பவர் எந்தளவு முக்கியமானவர்?

இந்தமுறையில், ரெகுலர் வகுப்புகள் நடக்காது என்பதால், ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் அரிதாகவே உள்ளது. எனவே, உங்களின் சந்தேகங்களை, நூலகம் அல்லது இணையதளம் ஆகியவற்றின் மூலமே பெரும்பாலும் நிவர்த்திசெய்ய முடியும். மேலும், தெரிந்த ஆசிரியர்கள் மற்றும் சீனியர்கள் ஆகியோர் மூலமாகவும் கேட்டு தெளிவு பெறலாம்.

மேலும், contact programme நடக்கையில், உங்களின் சந்தேகங்களை மொத்தமாக குறித்துவைத்துக்கொண்டு, ஆசிரியர்களிடம் தெளிவு பெற முயற்சிக்க வேண்டும். அவர்களிடம் நயமாக கேட்டு உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு ஆண்டிற்கு சில contact வகுப்புகளே நடக்கலாம். எனவே, கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

சம்பந்தப்பட்ட பல்கலையின் தொலைதூரக் கல்விக்கான இணையதளத்தில், கடந்தாண்டுகளின் வினாத்தாள்களும் இருக்கும். எனவே, அவற்றை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம், தேர்வில், கேள்விகள் எவ்வாறு கேட்கப்படும் என்பதை அறிந்துகொள்ளலாம். தொலைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, ஆசிரியர்களின் உதவி என்பது மிகவும் குறைவே. எனவே, தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்வதே புத்திசாலித்தனம்.

பள்ளிப் படிப்பு ஆர்ட்ஸ் பிரிவில் முடித்த ஒருவர், தொலைநிலைப் பட்டப் படிப்பை, அறிவியல் பிரிவில் மேற்கொள்ள முடியுமா?

ஆர்ட்ஸ் பிரிவில் படித்த மாணவர்கள், அதுதொடர்பான பட்டப் படிப்பு எதை வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கு எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால், அவர் சயின்ஸ் பிரிவுக்கு வர வேண்டுமெனில், பள்ளி மேல்நிலைப் படிப்பில் ஒரு கூடுதல் அறிவியல் பேப்பரை(additional paper) முடித்திருக்க வேண்டும். அவர்கள், பி.பி.ஏ., மற்றும் பி.ஏ., டூரிஸம் போன்ற படிப்புகளிலும் சேரலாம்.

அறிவியல் பிரிவுகளில், தொலைநிலையில் வழங்கப்படும் சில படிப்புகள்,

B.Sc., Hospitality and Catering servies
B.Sc., Interior design
B.Sc., Fashion design
B.Sc., Biotechnology
B.Sc., Bio - informatics
B.Sc., Actuarial Science
B.Sc., Medical laboratory technology
B.Sc., Optometry
B.Sc., Industrial drug science
B.Sc., Business information science.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us