/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சாத்தியமாகும் உலகத்தரம் வாய்ந்த கல்வி!
/
சாத்தியமாகும் உலகத்தரம் வாய்ந்த கல்வி!
ஜூன் 20, 2024 12:00 AM
ஜூன் 20, 2024 12:00 AM
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி குறித்து பலரும் பல விதமான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குகின்றனர். அனைத்து ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டு, அவற்றை ஆராய்ந்து இறுதி முடிவை கல்வி கற்கும் மாணவ, மாணவிகளே எடுக்க வேண்டும். யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் அந்த முடிவு இருக்கக்கூடாது!
எது சிறந்த கல்லூரி
சரியான ஊதியத்துடன், சரியான வேலை வாய்ப்பை எதிர்பார்த்தே பெரும்பாலான மாணவ, மாணவிகள் இன்று ஒரு கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்கின்றனர். அத்தகைய எதிர்பார்ப்பு நிறைவேற, சிறந்த முறையில் கல்வியை வழங்குவதோடு, துறை சார்ந்த 'சென்டர் ஆப் எக்செலென்ஸ்' உள்ள, சிறப்பான வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். கூடுதலாக சிறப்பு பயிற்சிகளையும், வேலை வாய்ப்புத் திறன் வளர்க்கும் பயிற்சிகளையும் வழங்குவதோடு, ஒவ்வொருவருடைய தனித்திறமைகளை வெளிக்கொணரும் கல்வி நிறுவனமாகவும் இருப்பது அவசியம்.
படிக்கும்போதே பாடத்திட்டத்தை கடந்து, பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக பலராலும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதர துறைகளில் உள்ள பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்வது முக்கியம்; அதேநேரம், கல்லூரி நாட்களிலேயே ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெறுவது இன்றைய காலத்தின் கட்டாயம். உதாரணமாக, 'வெப் டெவலெப்மெண்ட்' சார்ந்து பணிபுரிய விரும்புபவர்கள் 'புல்ஸ்டாக் டெவலெப்மெண்ட்'ல் நிபுணத்துவம் பெறும் அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். வகுப்பறையில் இருந்துகொண்டே, உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறுவது இன்று சாத்தியம். அதற்கான வசதி, வாய்ப்புகளை செய்து தரவேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமை.
'டிசைன் திங்கிங்' பாடத்திட்டம்
'பேஸ்புக்', 'லிங்கிட்இன்' போன்ற சமூக வலைதளங்களை பார்த்து, எந்த தொழில் நிறுவனமும் வேலை வழங்குவதில்லை. மாறாக, 'ஹேக்கர்ரேங்க்', 'லீட்கோட்' ஆகியவற்றில் என்ன 'ஸ்கோர்' வைத்திருக்கிறார்கள் என்பதையே இன்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. வேலையில் சேர்ந்த அன்றைய நாளில் இருந்தே சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. தேவைக்கு ஏற்ப, உரிய பயிற்சி அளிக்க எந்த நிறுவனமும் இன்று தயாராக இல்லை. இத்தகைய சூழலில், முன்பு கல்லூரி இறுதி ஆண்டில் தான் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். ஆனால், இன்று கல்லூரியில் சேர்ந்த முதலாவது ஆண்டிலிருந்தே வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கூடுதல் திறன் வளர்ப்பு பயிற்சிகளை பெற மாணவ, மாணவிகள் தயாராக இருந்தால், அவற்றை வழங்க அனைத்து கல்வி நிறுவனங்களும் தயாராகவே இருக்கின்றன. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மட்டுமின்றி, கலை அறிவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கும், புதுமையாக சிந்திக்கும் திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன், மாறுபட்டு அணுகும் திறன் ஆகியவை இன்று அவசியமாகிறது. ஆகையால்தான், இத்தகைய திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கும் 'டிசைன் திங்கிங்' பாடத்திட்டம் எங்கள் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது.
-நாகராஜ், துணை தலைவர், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், கோவை.
nagaraj@rathinam.in