sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்

/

எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்

எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்

எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்


டிச 05, 2013 12:00 AM

டிச 05, 2013 12:00 AM

Google News

டிச 05, 2013 12:00 AM டிச 05, 2013 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேச்சுத்திறன் இருக்கும் ஒருவர் எந்தளவு புகழ் பெறுவாரோ, அதேயளவு, எழுத்துத்திறன் வாய்க்கப் பெற்றவரும் புகழ் பெறுவார். எனவே, சிறப்பாக எழுதப் பழகுங்கள்.

உங்களின் எழுதும் முயற்சி ஆரம்பத்தில் சிறியதாகவே தொடங்கினாலும் பரவாயில்லை. முதலில், செய்தித்தாளுக்கு எழுதலாம். "ஆசிரியருக்கு கடிதம்" மற்றும் "வாசகர் கடிதம்" உள்ளிட்ட பகுதிகளில் எழுதிப் பழகலாம். அதை அனுப்பும் முன்பாக, ஓரளவு நன்றாக எழுதத் தெரிந்த யாரிடமாவது காண்பித்து சரிபார்த்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சில தோல்விகள் வந்தாலும், ஒருநாள் உங்களின் பெயருடன், நீங்கள் எழுதிய விஷயம் செய்தித்தாளில் வெளிவரும். அப்போது நீங்கள் அடையும் மகிழ்ச்சி பெரியது.

இதையடுத்து, உங்களின் நம்பிக்கைப் பெருகி, பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுதுதல், சிறுகதைகள் எழுதுதல் மற்றும் கவிதைகள் எழுதுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவீர்கள். அவற்றில் பல படைப்புகள் உங்களுக்கே திரும்பி வரும் அல்லது தேர்வு செய்யப்படாமல் போகும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது.

பிரபல எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளுக்கு ஆரம்பத்தில் நேர்ந்த கதி இதுதான். மேலும், ஒருவரின் எழுத்துத்திறன் என்பது, பத்திரிகைகளுக்கு எழுதுவதில் மட்டுமே சுருங்கிவிடாது மற்றும் விடவும் கூடாது. மாறாக, எழுவதின் எல்லை மிகவும் பெரியது.

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தங்களிடம் எழுத்துத்திறன் இருந்தால், கூட்டாக இணைந்து கையெழுத்துப் பிரதி நடத்தலாம். மேலும், சொந்தமாக புத்தகம் எழுதி வெளியிடலாம். மேலும், இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஒருவர் அச்சுத்தாளை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.

தனக்கென இணையத்தில் ஒரு Blog -ஐ தொடங்கி, அதில் நிறைய எழுதலாம். எழுதும் செயல்பாடானது, வெறுமனே எதையோ எழுதுவதில் அடங்கியதல்ல. மாறாக, எழுதுபவர் எப்போதும் நிறைய படித்துக்கொண்டே இருப்பது அவசியம். அப்போதுதான் நம் எழுத்து விஷயம் நிறைந்ததாக இருக்கும்.

பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை படிக்கும்போது, அவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள்? தரம் எப்படி? மற்றும் அவர்களின் அறிவு நிலை எந்தளவில் உள்ளது? என்பன போன்ற விஷயங்களில் உங்களுக்கு அறிதல் ஏற்படும். அதை வைத்து, உங்களை நீங்கள் எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் மற்றும் தகவமைத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்வதற்கு எளிதாக இருக்கும்.

மேலும், பல விஷயங்களைப் படிப்பதன் மூலமாக, ஏற்கனவே, ஒருவர் சொன்னதையே திரும்ப எழுதாமல் தவிர்ப்பதோடு, உங்களுக்கான புதிய சிந்தனையை உருவாக்கி எழுதலாம்.

எழுதுதல் என்பது வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாடு. அதில் ஆரம்பத்திலேயே உச்சியை தொட்டுவிடுவது முடியாத காரியம். அந்த முயற்சியில் ஒவ்வொருவரும் பல பரிணாமங்களை கடந்து செல்கிறார்கள். எனவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்குங்கள். எழுதும்போது நிறைய படியுங்கள்.

நீங்கள் படிக்கும் விஷயமும், எழுதும் விஷயமும் சமூகத்திற்கு உண்மையிலேயே, ஏதேனுமொரு விதத்தில் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். ஏனெனில், சமூகத்திற்கு உண்மையான நன்மையை கொண்டுவரும் படைப்புகள் மற்றும் உண்மையான வரலாறை தெரியப்படுத்தும் படைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

அவரவர், அவரவரின் நம்பிக்கை மற்றும் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையிலேயே எழுதுகிறார்கள். எனவே, புதிய தலைமுறையினர், அத்தகையதொரு மோசமான சூழலில் சிக்காமல், சமூகத்தின் உண்மையான வரலாற்றை ஆய்ந்து, சமூகத்தின் உண்மையான சிக்கலை பகுத்தறிந்து, அதற்கு இப்போது என்ன தேவை என்பதை கூராய்ந்து, அதற்கேற்ப தங்களின் எழுத்துக்களை வடிக்க முயற்சிக்க வேண்டும்.

பிரபலம் என்பதற்காக, எல்லாமே சரியாக இருந்துவிடாது. சரியாக இருப்பதெல்லாம் பிரபலமும் ஆகிவிடாது. எனவே, புகழ்பெறுதல் என்ற ஒன்றை மட்டுமே மனதில் வைத்து செயல்படாமல், உண்மை ஆற்றலை நம்பி, சமூகத்தின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு, எழுதத் தொடங்கவும்!






      Dinamalar
      Follow us