sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!

/

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!


நவ 11, 2014 12:00 AM

நவ 11, 2014 12:00 AM

Google News

நவ 11, 2014 12:00 AM நவ 11, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய கார்ப்ரேட் யுகத்தில், பல தனியார் நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும், உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவராக திகழ்கிறார்  சி.இ.ஓ., (Chief Executive Officer).

ரகசியம் அறியுங்கள்

இந்த பதவியை பிடிக்க இளைஞர்கள் பலருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால், பொறுப்புகள் நிறைந்த, அதிகாரங்கள் குவிந்து கிடக்கும் இப்பதவியை எப்படி அடைவது என்பதை அவர்கள் அறிவார்களா? குறிப்பாக, 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு இதுகுறித்த போதுமான தெளிவு இருக்குமா என்பது சந்தேகமே.

இளம் வயதினரும் இந்த பொறுப்பை அடைய முடியும் என்பதற்கு ‘பேஸ்புக்’ சக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், முதல் எத்தனையோ பேர் உதாரணமாக திகழ்கின்றனர். இளம் வயதினரும் சி.இ.ஓ., ஆக முடியும். அதற்கு இங்கே எந்தவித பயிற்சியும் அளிக்கப்போவதில்லை. சில முக்கிய ரகசியத்தை மட்டுமே சொல்லப்போகிறோம். அவை:

ரகசியம் 1: சரியான சூழலை தேர்வு செய்யுங்கள்

பொருத்தமான சூழல் இல்லாத இடத்தை தேர்வு செய்ததாலேயே பலர் தங்களது உண்மையான திறன்களை வெளிக்கொணர முடியாமல் தவிக்கின்றனர். இளம் வயதிலேயே சி.இ.ஓ., ஆவதற்கான முதல்படி, சரியான சூழல் உள்ள நிறுவனத்தில் சேர்வது. அதாவது, வயதிற்கு மரியாதை அளிக்கும் இடம் அல்ல; உழைப்புக்கு மரியாதை கிடைக்கும் இடம்.

உங்களது சுய குறிக்கோள் மற்றும் மதிப்புக்கு ஏற்ப உங்களால் உண்மையாக செயல்பட முடியாத இடத்தில் சாதிப்பது மிக மிக கடினம். எனவே, உங்களது குறிக்கோளை அடைவதற்கு சாத்தியமுள்ள சூழலை தேர்வு செய்வது அவசியம்; மாறாக, உங்களது குறிக்கோள் என்ன என்பதையே மறந்து போகக்கூடிய சூழல் அல்ல.

இளம் சி.இ.ஓ., டேன்னி வாட்டர்ஸ் சொல்கிறார், “நீங்கள் செய்யும் எந்த வேலையையும் ரசித்து, மகிழ்ச்சியாக செய்வது மிக முக்கியம். அப்போது தான், வெற்றிக்கு அது உங்களை அழைத்துச் செல்லும்”.

ரகசியம் 2: ‘ரிஸ்க்’ எடுக்க தயங்காதீர்கள்

இளம் வயதில் ‘ரிஸ்க்’ எடுப்பதில் பெரியளவில் எதையும் இழக்கப்போவதில்லை என்ற உண்மை நம்மில் பலர் அறிவதில்லை. ஆனால், எதிர்வரும் விளைவுகளை நினைத்து பயந்தே எந்தவித ‘ரிஸ்க்’ எடுக்கவும் தயங்குகிறோம். இளம் தனிநபர் எடுக்கும் எந்த பெரிய ‘ரிஸ்க்’கும் தோல்வியில் முடிந்தாலும், அதனால் பெரிய இழப்பில்லை. ஒருவேளை, விளைவுகள் அதிகமாக இருந்தாலும், அதுவும் ஒருவிதத்தில் நல்லதே.

“தோல்வியின் விளைவுகள் குறைவாக இருக்கும்பட்சத்தில், உங்களுக்கு எதையும் எதிர்த்துநிற்கும் திறன் வராது” என்கிறார் இளம் சி.இ.ஓ., ஜோனதன் சாமுவேல்ஸ்.

ரகசியம் 3: உங்களை பிறர் மதிக்க செய்யுங்கள்

முன்னேறி நீங்கள் மேலே மேலே செல்ல வேண்டுமானால், உங்களது முடிவுக்கு சக பணியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். வயதில் மூத்தவர்கள் அதிகளவில் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இது மிகக் கடினமானதாக தோன்றலாம்.  எனவே, நீங்கள் செய்யும் வேலைக்கும், உங்களது திறமைக்கும் மதிப்பளிப்பவர்கள் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.

சாமுவேல்ஸ் மேலும் சொல்கிறார், “பிற நிறுவனங்களுடனான வணிக பேச்சுவார்த்தைகளின் போது உங்களது இளம் வயது எதிர்தரப்பினருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், எனது அனுபவத்தில் சொல்கிறேன்... என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து பேசும்போது, அவர்களது ஆச்சரியம் விரைவில் காணாமல்போய்விடும்”.






      Dinamalar
      Follow us