ஆக 08, 2025 12:00 AM
ஆக 08, 2025 12:00 AM

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படும் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆண்டுதோறும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.
மாணவர் சேர்க்கை முறைகள்:
முழுநேர முதலாம் ஆண்டு சேர்க்கை, சிறப்பு முதலாம் ஆண்டு சேர்க்கை, நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை.
கல்லூரிகள்:
மாநிலம் முழுவதிலும் உள்ள 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகள், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகள் என பல்வேறு வகையான கல்லூரிகளில் வழங்கப்படும் டிப்ளமா படிப்புகள்.
முக்கிய பாடப்பிரிவுகள்:
சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், பெட்ரோ-கெமிக்கல் இன்ஜினியரிங், பிரிண்டிங் டெக்னாலஜி
தகுதிகள்:
முழுநேர முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 10ம் வகுப்பு அல்லது இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பில் உரிய பாடப்பரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு அண்டு ஐ.டி.ஐ., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாகவும், கடந்த 5 ஆண்டுகால பள்ளி படிப்பை தமிழகத்திலயே படித்தாவர்களாகவும் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
இட ஒதுக்கீடு:
தமிழக அரசின் உத்தரவின்படி, பொது பிரிவினர், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.,-அருந்ததியினர், எஸ்.டி., ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tnpoly.in/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://dte.tn.gov.in/