மே 27, 2026 09:07 AM
மே 27, 2026 09:07 AM

அமெரிக்காவில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக, புல்பிரைட் - நேரு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2027-28 கல்வியாண்டுக்கான உதவித்தொகை பெற தற்போது விண்ணப்பிக்கலாம்.
முக்கிய திட்டங்கள்:
புல்பிரைட் - நேரு டாக்டோரல் ரிசர்ச் பெல்லோஷிப்
புல்பிரைட் - நேரு போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச் பெல்லோஷிப்
புல்பிரைட் - நேரு அகடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்லென்ஸ் பெல்லோஷிப்
கால அளவு:
இந்த உதவித்தொகை திட்டங்கள் வாயிலாக அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் 4 முதல் 24 மாதங்கள் வரை ஆராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
டாக்டோரல் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., பதிவு செய்திருக்க வேண்டும். போஸ்ட் டாக்டோரல் மற்றும் அகடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்லென்ஸ் உதவித்தொகைக்கு பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய துறைகள்:
ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோ இன்ஜினியரிங், எனர்ஜி ஸ்டடீஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ் போன்ற துறைகளுக்கு இந்த ஆண்டில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை சலுகைகள்:
விமானக்கட்டணம், விசா, மருத்துவ காப்பீடு, ஆராய்ச்சி மற்றும் கல்வி கட்டணம் ஆகியவற்றுடன் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 1; போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச் பெல்லோஷிப் - ஜூலை 15
விபரங்களுக்கு:
https://www.usief.org.in/
