sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சியில் மதுரை துாள் கிளப்புது அரசு பள்ளிகள் சாதனை மாநில ரேங்க் முன்னிலை

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சியில் மதுரை துாள் கிளப்புது அரசு பள்ளிகள் சாதனை மாநில ரேங்க் முன்னிலை

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சியில் மதுரை துாள் கிளப்புது அரசு பள்ளிகள் சாதனை மாநில ரேங்க் முன்னிலை


UPDATED : மே 21, 2026 04:12 PM

ADDED : மே 21, 2026 04:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 04:12 PM ADDED : மே 21, 2026 04:15 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 94.91 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் முந்தைய ஆண்டு (93.93 சதவீதம்) விட 0.98 சதவீதம் அதிகரித்து மாநில ரேங்கிலும் மதுரை மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது. மாவட்டத்தில் 479 பள்ளிகளை சேர்ந்த 35,586 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வழக்கம் போல் மாணவர்களை (92.75 சதவீதம்) விட மாணவிகள் (97.02 சதவீதம்) 4.27 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

மாணவர்கள் சிறப்பிடம்


அரசு மாவட்ட மாடல் பள்ளி மாணவர் ஆதிவரதன், மேலுார் ஆட்டுக்குளம் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீதாரணி, தனியார் பள்ளி மாணவி சாய் சஞ்சனா ஆகியோர் 500க்கு தலா 497 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

இவர்களையடுத்து அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவி துர்கா, மேலுார் ஆட்டுக்குளம் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக் பள்ளி மாணவி கனிஷ்கா, தனியார் பள்ளி மாணவர்கள் அர்ச்சதன், பூர்விகா, புவியரசு ஆகியோர் தலா 496 மதிப்பெண்கள் பெற்றனர்.

அடுத்ததாக மேலுார் ஜாஸ் பப்ளிக் பள்ளி மாணவி அமுதமொழி, தனியார் பள்ளி மாணவி தீபிகா, சக்குடி கல்யாண் மெட்ரிக் மாணவி தானுஸ்ரீ, அலங்காநல்லுார் தாய் மெட்ரிக் மாணவர் தமீம் சுல்தான், சிம்மக்கல் சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் மதுஸ்ரீ, ராகதர்ஷிணி ஆகியோர் தலா 495 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர். அரசு பள்ளிகளில் சொக்கலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 492, மாவட்ட மாடல் பள்ளி மாணவர் லக் ஷன் 490 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

196 பள்ளிகள் சென்டம்



மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 92.57, உதவி பெறும் பள்ளிகள் 94.66, மெட்ரிக் பள்ளிகள் 98.16 சதவீதம் தேர்ச்சி பெற்றன. வழக்கம் போல் இந்தாண்டும் மெட்ரிக் பள்ளிகளில் தேர்ச்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இதுபோல் 68 அரசு, 21 உதவிபெறும், 107 மெட்ரிக் என 196 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 1.49 சதவீதம் கூடுதலாக அதிகரித்து சாதனை படைத்துள்ளன.

283 பேர் 'சென்டம்'



பாடம் வாரியாக கடந்தாண்டு 755 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். ஆனால் இந்தாண்டு தமிழில் 1, கணிதம் 132, அறிவியல் 115, சமூக அறிவியல் 35 என மொத்தம் 283 பேர் 'நுாற்றுக்கு நுாறு' பெற்றனர். ஆங்கிலத்தில் யாரும் 'சென்டம்' பெறவில்லை. மாவட்டத்தின் தேர்ச்சி அடிப்படையில் மாநில அளவில் 22 வது இடத்தில் இருந்த மதுரை தற்போது 19 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்த இலக்கு 'சிங்கிள் டிஜிட்'


மாவட்ட தேர்ச்சி முடிவுகளை சி.இ.ஓ., தயாளன் தலைமையில் டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார் (மதுரை), கணேசன் (மேலுார்), மோகன் (மாநகராட்சி) ஆய்வு செய்தனர். சி.இ.ஓ., தயாளன் கூறியதாவது, இது வரை இல்லாத வகையில் மாவட்ட தேர்ச்சியில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி முக்கிய பங்காற்றியுள்ளன. இதன் பின்னணியில் மாணவர்களுக்கு அடிக்கடி சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன.

படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கையேடுகள் பலன் அளித்துள்ளன. கூடுதல் தேர்ச்சி கிடைத்துள்ளது. ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது. உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சிக்கு அடுத்தாண்டு அதிக கவனம் செலுத்தப்படும். அடுத்தாண்டு மாவட்ட 'ரேங்க்' ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சிறை கைதிகள் 'ஆல் பாஸ்'



மதுரை மத்திய சிறையில் கைதிகள் 53 பேர் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். முதல் 3 இடங்களை கார்த்தி (379 மதிப்பெண்), தினேஷ்குமார் (373), ராஜகோபால் (371) பெற்றனர். கைதிகளை டி.ஐ.ஜி., முருகேசன், கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பாராட்டினர்.

மாநகராட்சி பள்ளிகள் சாதனை



பத்தாம் வகுப்பு தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் 91.75 சதவீதம் தேர்ச்சி பெற்றன. மாசாத்தியார், கம்பர், சேதுபதி பாண்டித்துரை, திருவள்ளுவர், என்.எம்.எஸ்.எம்., மணிமேகலை என 7 பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்றன. வெள்ளி வீதியார் பள்ளி மாணவி அபிஸ்ரீ 492, அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலை பள்ளி மாணவர் சுதர்சன் 491, இளங்கோ பள்ளி மாணவர் அஜர் அகமது அஸ்லாம் 489 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

அறிவியலில் 2, சமூக அறிவியலில் ஒரு மாணவரும் நுாற்றுக்கு நுாறு பெற்றனர். சாதனை மாணவர்களை துணைமேயர் நாகராஜன் பாராட்டினார். துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் மோகன் உடனிருந்தனர்.

தமிழில் 413 பேர் தோல்வி


இந்தாண்டு தமிழ் பாடத்தில் 413 மாணவர் தோல்வியை தழுவியுள்ளனர். இதுபோல் மாவட்டத்தில் 2025ல் 550, 2024ல் 712, 2023ல் 691 மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us