sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெங்களூருக்கு கல்வி சுற்றுலா வரும் தமிழக மாணவர்கள் கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு கட்டாயம் வர வேண்டும்

பெங்களூருக்கு கல்வி சுற்றுலா வரும் தமிழக மாணவர்கள் கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு கட்டாயம் வர வேண்டும்

பெங்களூருக்கு கல்வி சுற்றுலா வரும் தமிழக மாணவர்கள் கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு கட்டாயம் வர வேண்டும்


UPDATED : மே 30, 2026 09:58 AM

ADDED : மே 30, 2026 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 09:58 AM ADDED : மே 30, 2026 10:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
“பெங்களூருக்கு கல்வி சுற்றுலா வரும் தமிழக மாணவர்கள், கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு கட்டாயம் வர வேண்டும்,” என, எழுத்தாளர் கிளமென்ட் அந்தோணிராஜ் அழைப்பு விடுத்து உள்ளார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை 'தினமலர்' அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, தமிழக அரசின் உள்ளாட்சி துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கிளமென்ட் அந்தோணி ராஜ் நேற்று வந்தார். நுாலகத்தில் இருந்த புத்தகங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். 'அரிய வகை புத்தகங்களை இங்கு குவித்து வைத்து உள்ளீர்களே...' என்று பாராட்டினார்.

அலாதி பிரியம்


பின், அவர் கூறியதாவது:

என் சொந்த ஊர் தஞ்சாவூர். தமிழக அரசின் உள்ளாட்சி துறை யில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன். தற்போது உள்ளாட்சி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சட்டம் தொடர்பான, பயிற்சி அளி க்கிறேன்.

நான், 'தினமலர்' நாளிதழின், 25 ஆண்டு கால வாசகர். ரயில் பயணத்தின் போது 'தினமலர்' நாளிதழை வாங்கி படிப்பதில், எனக்கு அலாதி பிரியம்.

எனது மகள் வீடு பெங்களூரு ஹொசா ரோட்டில் உள்ளது. திருச்சியில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த போது, இந்த நுாலகம் தொடர்பான செய்தியை பார்த்தேன். நுாலகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இங்கு வந்து உள்ளேன்.

பெங்களூரில் இது போன்ற நுாலகத்தை அமைத்ததற்காக, உண்மையிலேயே 'தினமலர்' நிர்வாகத்தை பாராட்ட வேண்டும்.

தனிமையான தீவு

பெங்களூரு வாழ் தமிழர்களுக்கு இந்த நுாலகம் பெரும் கொடை. என் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள். 'நான் இதுவரை வாசிக்காத நல்ல புத்தகத்தை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே, என் நண்பன்' என, ஆபிரகாம் லிங்கன் கூறினார். தனிமை தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவேன் என்றார் ஜவஹர்லால் நேரு.
ஒரு குழந்தைக்கு பரிசளிக்க விரும்பினால், புத்தகம் வாங்கி தாருங்கள் என்று கூறினார் வின்சென்ட் சர்ச்சில். இப்படி புத்தகங்கள் நாம் ஆன்றோர், சான்றோர் வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ளது.

'தினமலர்' பவளவிழா கொண்டாடும் வேளையில், இந்த நுாலகம் அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு வாய்ந்தது. அதுவும் நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு கல்வி சுற்றுலா வரும், தமிழக மாணவர்கள், கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு கட்டாயம் வர வேண்டும்.

ஓய்வுக்கு பின் நேரத்தை வீணடிக்காமல் இருக்க, எழுத்தாளர் அவதாரம் எடுத்து உள்ளேன். இதுவரை 10 புத்தகங்கள் எழுதி வெளியிட்டு உள்ளேன். 11வது புத்தகத்தை எழுதி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏழு நாட்களும் பூத்து குலுங்கும்


வாரத்தின் ஏழு நாட்களும் காலை 09:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us