தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் துவக்கம்: முதல் போட்டியிலேயே தெறிக்க விட்ட பள்ளி மாணவர்கள்

தினமலர் மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் துவக்கம்: முதல் போட்டியிலேயே தெறிக்க விட்ட பள்ளி மாணவர்கள்

தினமலர் மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் துவக்கம்: முதல் போட்டியிலேயே தெறிக்க விட்ட பள்ளி மாணவர்கள்


UPDATED : ஆக 29, 2026 01:24 PM

ADDED : ஆக 29, 2026 01:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 01:24 PM ADDED : ஆக 29, 2026 01:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தினமலர் புதுச்சேரி பதிப்பின் இந்தாண்டிற்கான, மெகா 'வினாடி வினா' போட்டி புதுச்சேரி, தேங்காய்திட்டு ஆச்சாரியா பால சிக்க்ஷா மந்திர் பள்ளியில் ஆரவாரத்துடன் நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று அசத்தலாக பதிலளித்தனர்.

புதுச்சேரி, தமிழகம் பள்ளி மாணவர்களுக்காக 'தினமலர்-பட்டம்' இதழ், வினாடி வினா போட்டி, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்தாண்டு, மெகா வினாடி-வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம், 150 பள்ளிகளுக்கு நடத்தப்பட உள்ளது.

இதனை, 'தினமலர் - பட்டம்' இதழுடன், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது.

இந்த மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. முதல் பள்ளியாக , புதுச்சேரி தேங்காய்திட்டு, ஆச்சாரியா பால சிக்க்ஷா மந்திர் பள்ளியில், வினாடி வினாடி போட்டிக்கான தகுதி சுற்றாக, முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது.

இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் 600 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு, 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப்படையில் தலா, 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான, வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, 16 மாணவர்களும், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி நடந்தது. இந்த போட்டி, 3 சுற்றுகளாக அரங்கேறியது.

ஒவ்வொரு சுற்றிலும் 8 திணறடிக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த, 8 அணியினருக்கும், வினாக்கள் கேட்கப்பட்டன. அதன்பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில், முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது. சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதிலளித்தனர்.

இறுதியில், 9ம் வகுப்பு மாணவர்கள் அரவிந்த்குமார், அச்சுதவேல் ஆகியோர் அடங்கிய அணி, முதலிடம் பிடித்து அசத்தியது. பிளஸ் 2 மாணவிகள் சங்கமித்ரா, கமலிக்கா ஆகியோர் அடங்கிய மற்றொரு அணி இரண்டாம் பிடித்தது.

முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடக்கும், அடுத்த சுற்றுக்கு தேர்வானது. போட்டியில் சரியான விடையளித்த மாணவர்களை பார்வையாளர்கள் கர ஒலி எழுப்பி, உற்சாகப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் ஆந்திர மாநில சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் ஆகியோர் பதக்கம், பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர்.

இதே போல, கடலுார், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மீதமுள்ள பள்ளிகளில் நடக்கும் தினமலர் மெகா போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி, மாநில அளவிலான அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் முதலிடம் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அசத்தலான, அமர்க்களமான பரிசுகள் காத்திருக்கின்றன.

சிறப்பு விருந்தினர்கள் புகழாரம் சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது 'பள்ளி பாட புத்தகங்களையும், பொது அறிவு விஷயங்களையும், 'தினமலர்-பட்டம்' இதழ் எளிமைப்படுத்தி, தாய் மொழியான தமிழில் அளித்து வருகிறது. இந்தியாவில், வேறு எந்த மாநில மொழியிலும், இது போன்ற முயற்சி நடைபெறவில்லை.

தமிழில் தான், முதன்முறையாக, இத்தகைய மாணவர் நாளிதழ்,நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம்,புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்துத் தரப்பினரின் பேராதரவோடு பட்டம் இதழ் பீடுநடை போட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களின் பொது அறிவு, அறிவியல் தகவல்கள் ஆகியவற்றுடன் கூடிய, நுண்ணறிவை வளர்க்கும் வகையில், பட்டம் இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் இடம் பெறுவதால் இன்றைய தலைமுறையினருக்கு அறிவு பெட்டகமாக உள்ளது என்று புகழாரம் சூட்டினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us