sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் சிறப்பு குழு! சென்னை பல்கலை மீதான புகார்களால் அதிரடி

/

ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் சிறப்பு குழு! சென்னை பல்கலை மீதான புகார்களால் அதிரடி

ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் சிறப்பு குழு! சென்னை பல்கலை மீதான புகார்களால் அதிரடி

ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் சிறப்பு குழு! சென்னை பல்கலை மீதான புகார்களால் அதிரடி


UPDATED : ஏப் 15, 2026 10:54 AM

ADDED : ஏப் 15, 2026 11:02 AM

Google News

UPDATED : ஏப் 15, 2026 10:54 AM ADDED : ஏப் 15, 2026 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய பட்டியலின ஆணைய பரிந்துரைப்படி, சென்னை பல்கலை மீது எழுந்துள்ள ஜாதி பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து, தமிழக அரசின் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை பல்கலையில், பேராசிரியர்கள் பதவி உயர்வு உட்பட பல்வேறு கல்விசார் நடவடிக்கைகளில், உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என, குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பல்கலையில், ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன.

இது தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணையத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பின், ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, கடந்த பிப்ரவரி 9ல், பல்கலை வளாகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

சென்னை பல்கலை பதிவாளர் நியமனத்திற்கான தேர்வுக் குழுவில், யு.ஜி.சி., விதிகளின்படி, எஸ்.சி., எஸ்.டி., பிரதிநிதிகள் இடம் பெறாதது குறித்து எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்தது.

தொடரும் புகார்

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம், பி.எச்.டி., மற்றும் பல்கலை ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தில், உரிய இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. எஸ்.சி., எஸ்.டி., பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியர் என்பதால், சர்வதேச ஹிந்தி மாநாட்டில் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா பல்கலையுடன் இணைந்து துவக்கப்பட்ட பி.எஸ்., பட்டப்படிப்பில் பட்டியலின மாணவர்களுக்கு சேர்க்கை மறுப்பு உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்தும், தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை நடந்தது.

இந்நிலையில், தேசிய பட்டியலின ஆணையத்தின் பரிந்துரைப்படி, சென்னை பல்கலையில், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து, விரிவான விசாரணை நடத்த, தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய பட்டியலின ஆணைய பரிந்துரைப்படி, சென்னை பல்கலை மீதான புகார்கள் குறித்து விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களிடம் விரிவான விசாரணை நடத்தும். இந்த விசாரணை அறிக்கை, பட்டியலின ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின், தவறு செய்தவர்கள் மீது, துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us