தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் நடந்த பட்டம் வினாடி வினா நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் நடந்த பட்டம் வினாடி வினா நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் நடந்த பட்டம் வினாடி வினா நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி


UPDATED : அக் 14, 2026 05:56 PM

ADDED : அக் 14, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 05:56 PM ADDED : அக் 14, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவை வளர்க்கும் 'பட்டம்'


தினமலர் நாளிதழின் 'பட்டம்' இதழை படிப்பதால், பாடப் புத்தகங்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் உட்பட அப்பாற்பட்ட பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அறிவியல், வரலாறு, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வெளியாகும் தகவல்கள் எங்கள் அறிவை வளர்க்கின்றன. 'பட்டம்' இதழ் சிந்திக்கும் திறனை வளர்ப்பதுடன், வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன.

- சபரீஷ், பிளஸ் 1.

தன்னம்பிக்கை அதிகரிக்கிறது


தினமலர் 'பட்டம்' இதழை தொடர்ந்து படிப்பதால், பொது அறிவு அதிகரிப்பதுடன், பல்வேறு துறைகள் குறித்த புரிதலும் மேம்படுகிறது. உலக நிகழ்வுகள், நடப்பு செய்திகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதால் எங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. வினாடி வினா போட்டிகளில் எளிதாக பதில் அளிப்பதுடன், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. 'பட்டம்' இதழுக்கு நன்றி.

- ஜோன்ஸ், பிளஸ் 1.

'பட்டம்' பொக்கிஷம்


'பட்டம்' இதழில் அறிவியல், வரலாறு, கணிதம் மற்றும் பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட பல அரிய தகவல்கள் உள்ளன. வினாடி - வினா போட்டியில் பங்கேற்க வந்தபோது பயமாக இருந்தது. கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்து புரியும்படி உள்ளதால் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், தினமலர் 'பட்டம்' இதழ் மாணவர்களின் பொக்கிஷமாக உள்ளது. புதுச்சேரியில் நடக்கும் இறுதி போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

- ஜெய்சி கிளேர்ஸ், பிளஸ் 1.

' பட்டம்' இதழுக்கு நன்றி


தினமலர் நாளிதழின் 'பட்டம்' இதழில் அன்றாட நிகழ்வுகள் அறிவியல் தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு உட்பட பல்வேறு தலைப்புகளில் வெளியாகும் தகவல்கள் எங்களுக்கு பெரிதும் உதவுகின்றது. 'பட்டம்' வினாடி - வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. 'பட்டம்' இதழுக்கு நன்றி.

- ஜனனி, பிளஸ் 1.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us