தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவிலான உலக திறனாய்வு - தடகள போட்டியில் ஆர்வமாக பங்கேற்ற மாணவர்கள்

மாவட்ட அளவிலான உலக திறனாய்வு - தடகள போட்டியில் ஆர்வமாக பங்கேற்ற மாணவர்கள்

மாவட்ட அளவிலான உலக திறனாய்வு - தடகள போட்டியில் ஆர்வமாக பங்கேற்ற மாணவர்கள்


UPDATED : பிப் 16, 2015 12:00 AM

ADDED : பிப் 16, 2015 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2015 12:00 AM ADDED : பிப் 16, 2015 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட அளவிலான உலக திறனாய்வு - தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தலாக பங்கேற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவு சார்பில் பள்ளி 6வது, 7, 8 வது மாணவர்களுக்கான உலக திறனாய்வு (வேர்ல்டு பீட்டர்ஸ்) தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. கோவை கல்வி மாவட்டத்தில் இருந்து, 95 பள்ளிகளை சேர்ந்த, 1,150 பேர்; 100மீ., 200மீ., 400மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

மாணவர் 6வது வகுப்பு: 100மீ., - ஸ்டேன்ஸ் பள்ளி சாமுவேல் செல்வாசிங், குனியமுத்துார் அரசு பள்ளி ரோசன்அக்தார், மணி பள்ளி மோகன்குமார்; 200மீ., - குனியமுத்துார் அரசு பள்ளி அகமதுஅலி, மேட்டுப்பாளையம் எல்.இ.எப்., மெட்ரிக் பள்ளி சுதர்ஷன், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ரியான்னோ; 400மீ., - பயோனீர் பள்ளி தினேஷ்குமார், மணி பள்ளி விஷ்ணு குமார், செயின்ட் மேரீஸ் பள்ளி ராகுல்; நீளம் தாண்டுதல் - ஜி.ஆர்.டி.,சிபிஎப்., பள்ளி கிருபாகரன், 100அடி ரோடு செயின்ட் மேரீஸ் பள்ளி அபிஷேக், மேட்டுப்பாளையம் செயின்ட் ஜோசப் பள்ளி; உயரம் தாண்டுதல் - இருட்டுப்பள்ளம் பியுஎம் பள்ளி லிங்கேஸ்வரன், கணேஷ்புரம் அரசு பள்ளி எம்.சிவா, ஆர்.சிவா; குண்டுஎறிதல் - ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சுபம் குமார் மண்டல், சாவ்ரா வித்யா பவன் ஜெய்சன், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி தீபக் குமார் ஆகியோர்.

7 வது வகுப்பு: 100மீ., சுண்டபாளையம் பவன்கல்யாண், மணி பள்ளி கிசோர்குமார், ஜி.ஆர்.டி.,சிபிஎப் பள்ளி அபிஷேக்; 200மீ.,-பாரதி மெட்ரிக் பள்ளி கோகுலகிருஷ்ணன், ஸ்டேன்ஸ் பள்ளி கிரிதர், அத்வைத் ஜி.என்.எஸ்., பள்ளி சஞ்சய்பாபு, கத்ரிமில்ஸ் பள்ளி மிதுன்ராஜ்; நீளம் தாண்டுதல் - கள்ளப்பாளையம் அரசு பள்ளி ஜோசப், ஜி.ஆர்.டி.,சிபிஎப் பள்ளி நிவாஷ், சாவ்ரா வித்யபவன் சஞ்சய்; உயரம் தாண்டுதல் - ஜி.கே.டி., பள்ளி விபுல் கிருஷ்ணா, இருகூர் அரசு பள்ளி விக்னேஷ், மதுக்கரை மல்லையன் பள்ளி மோகன்ராஜ்; குண்டு எறிதல் - ஜி.கே.டி., மெட்ரிக் பள்ளி ஹருண்ராஜ், பி.யு.எம்., பள்ளி சத்தியபெருமாள், குனியமுத்துார் பூபாலகிருஷ்ணன் ஆகியோர்.

8வது வகுப்பு: 100மீ., சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி துரை வசந்த், வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஹரிகிருஷ்ணன், வித்யாநிகேதன் பள்ளி ஹேமந்த்; 200மீ., - ஸ்டேன்ஸ் பள்ளி நிதின், டேனியல் டேவிட் ராஜ், மணி பள்ளி விஷால் க்ரிகேஷ்; 400மீ., - தம்பு பள்ளி சிவ பிரதாப், சாய் வித்யா நிகேதன் பள்ளி ஹரிகரன், ஸ்டேன்ஸ் பள்ளி ரிதின் ஆசிஷ். நீளம் தாண்டுதல் - ஜி.ஆர்.டி.சிபிஎப். பள்ளி சந்தோஷ், கவுதம், ஸ்வதந்திரா பள்ளி சந்தோஷ்; உயரம் தாண்டுதல் - ஜி.கே.டி., பள்ளி ஹர்ஷவர்த்தன், போத்தனுார் செயின்ட் ஜோசப் பள்ளி சாமுவேல் ஜோசுவா, ஜி.கே.டி., பள்ளி சுதேஷ்; குண்டு எறிதல் - கணுவாய் எம்.ஜி.எம்., பள்ளி ஜீவா, சங்கனுார் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி கோகுல், விளாங்குறிச்சி வித்யாநிகேதன் பள்ளி ஜஸ்வந்த் ஆகியோர்.

முதல் இரண்டு இடங்கள் பெற்றவர்கள் மட்டும் மண்டல போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். இத்தகவலை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மாத்யூ தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us