இளைஞர் அறிவை பட்டை தீட்டும் பொக்கிஷம் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு பாராட்டு
இளைஞர் அறிவை பட்டை தீட்டும் பொக்கிஷம் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு பாராட்டு
UPDATED : மே 12, 2026 06:03 PM
ADDED : மே 12, 2026 06:06 PM
பெங்களூரு:
'இளம் தலைமுறையினர் அறிவை பட்டை தீட்டும் பொக்கிஷம்' என, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு சிவாஜி நகர் குயின்ஸ் சாலை 'தினமலர்' அலுவலகத்தின், கடல் தாமரை பூங்கா நுாலகத்திற்கு, கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சங்கத்தின் சுரேஷ் குமார் - ஷகிலா; சித்தானந்தன் - வாணி தம்பதி நேற்று வந்தனர். கடல் தாமரை பதிப்பகத்தின் கோளாறு பதிகம் புத்தகம் மற்றும் ஆன்மிக புத்தகங்களை ஆர்வமாக படித்து பார்த்தனர்.
இந்த தம்பதி கூறியதாவது:
நாங்கள் பல பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்று உள்ளோம். எங்குமே இது போன்று நுாலகம் இருப்பதை பார்த்ததே இல்லை. முதல் முறையாக பத்திரிகை அலுவலகத்தில் நுாலகத்தை பார்த்தது மகிழ்ச்சி. இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த, தினமலர் நிர்வாகத்துக்கு வாழ்த்துகள்.
இந்த நுாலகம் இளம் தலைமுறையினர் அறிவை பட்டை தீட்டும் பொக்கிஷமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவு செய்யும், இளம் தலைமுறையை இங்கு அழைத்து வர வேண்டும். இன்னும் நிறைய புத்தகங்கள் வையுங்கள். கன்னட புத்தகங்களையும் இங்கு வைத்திருப்பது சிறப்பான முடிவு.
எங்கள் சங்கத்தில் இருப்போரிடமும் இங்கு சென்று புத்தகம் படிக்கும்படி சொல்கிறோம். எங்களது உறவினர்கள் பிள்ளைகளையும் அழைத்து வருகிறோம். இங்கு வந்தது மகிழ்ச்சி. மனநிறைவுடன் செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏழு நாட்களும் பூத்து குலுங்கும்
வாரத்தின் ஏழு நாட்களும் காலை 09:30 மணி முதல் இரவு, 09:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
