sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கை; இன்று தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கை; இன்று தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கை; இன்று தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு


UPDATED : மே 22, 2026 05:21 PM

ADDED : மே 22, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2026 05:21 PM ADDED : மே 22, 2026 05:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர்:
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, குலுக்கல் முறையில் மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று நடக்கிறது என, கரூர் கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:


கரூர் மாவட்டத்தில், 94 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில், 25 சதவீதம் அடிப்படையில் தனியார் பள்ளிகளில், 1,092 இடங்கள் உள்ளன.

இதற்கு, 1,516 விண்ணப்பங்கள் இணையம் வழியாக பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு குலுக்கல் முறையில் மாணவ, மாணவியர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி, அனைத்து தனியார் பள்ளிகளிலும் விண்ணப்பித்த மாணவர், பெற்றோர்களின் முன்னிலையில் குலுக்கல் நடக்கும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us