பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்பிற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் கோரிக்கையை ஏற்று சென்டாக் நடவடிக்கை
பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்பிற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் கோரிக்கையை ஏற்று சென்டாக் நடவடிக்கை
UPDATED : செப் 07, 2026 10:41 PM
ADDED : செப் 07, 2026 10:42 PM
புதுச்சேரி:
பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் டிப்ளமோ படிப்பை முடித்து, துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் தங்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி உயர்கல்வி துறையும், சென்டாக்கும் இணைந்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி:: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சென்டாக்கின் இணையதளமான www.centacpuducherry.in என்ற முகவரிக்குச் சென்று தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 9ம் தேதி மாலை 5:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம், தகுதி வரம்புகள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அல்லது புகார்களைத் தங்களது லாகின் டேஷ்போர்டு வாயிலாகச் சமர்ப்பிக்கலாம். உதவிக்கு 0413-2655570 அல்லது 0413-2655571 ஆகிய சென்டாக் எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
