தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் முதல்வரை சந்திக்க அழைத்துச் செல்கிறேன்: அமைச்சர் வினோத்

அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் முதல்வரை சந்திக்க அழைத்துச் செல்கிறேன்: அமைச்சர் வினோத்

அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் முதல்வரை சந்திக்க அழைத்துச் செல்கிறேன்: அமைச்சர் வினோத்


UPDATED : நவ 16, 2026 10:19 AM

ADDED : நவ 16, 2026 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 10:19 AM ADDED : நவ 16, 2026 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்:
10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை, முதல்வரிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்துப் பெற ஏற்பாடு செய்வேன் என வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி கேக் மற்றும் வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் வினோத் கலந்துக்கொண்டார்.

அவர் பேசியதாவது:


மாணவர்கள் அனைவரும், கல்வியில் முழு கவனம் செலுத்தி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளேன். எனக்கு கூடப் பிறந்த தங்கைகள் யாரும் இல்லை. ஆனால், இத்தனை தங்கைகள் எனக்குக் கிடைத்துள்ளனர். இது எனக்கு மிகுந்த பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர் நிலைக்கு வர வேண்டும். அதே சமயத்தில் உங்களைச் செதுக்கிய பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், உங்களுக்குக் கஷ்ட காலத்தில் உதவியவர்களையும் எக்காலத்திலும் மறந்துவிடக் கூடாது. உயர்ந்த நிலைக்கு சென்ற பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்புப் அரசு பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை, முதல்வரிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்துப் பெற ஏற்பாடு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us