தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.டெக்., மாணவரிடம் வசூலித்த கட்டணத்தை திரும்ப தர நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு

பி.டெக்., மாணவரிடம் வசூலித்த கட்டணத்தை திரும்ப தர நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு

பி.டெக்., மாணவரிடம் வசூலித்த கட்டணத்தை திரும்ப தர நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு


UPDATED : செப் 23, 2013 12:00 AM

ADDED : செப் 23, 2013 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2013 12:00 AM ADDED : செப் 23, 2013 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலை, மாணவரிடம் வசூலித்த கல்வி கட்டணத்தொகையை திருப்பித்தர வேண்டும் என, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆந்திரா வங்கி உதவி பொது மேலாளர் மனோகர். இவரது மகன் ஸ்ரீராமை, 2008ம் ஆண்டு, தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலை பல்கலையில் பி.டெக்., (இ.இ.இ.,) படிப்பில் சேர்த்தார். முதலாமாண்டு முடிந்து, 2009ல் மூன்றாம் பருவம் கல்விக்கட்டணம் 36 ஆயிரம் ரூபாய் கட்டினார். ஆகஸ்ட் 2009ல் என்.ஐ.டி., கல்லூரியில் பி.டெக்., கோர்ஸில் சேர, ஸ்ரீராமுக்கு இடம் கிடைத்தது.

சாஸ்திரா பல்கலையில் இரண்டாம் ஆண்டில் சேர்ந்த அவர் 30 நாளில் பல்கலையிலிருந்து விலகினார். மூல சான்றிதழ்கள், மூன்றாம் பருவ கல்வி கட்டணத்தை திருப்பி கேட்ட போது, பல்கலை நிர்வாகம் தரமறுத்து, "எட்டு பருவத்தில் மூன்று பருவத்துக்கு கல்விக்கட்டணம் கட்டி விட்டீர்கள். மீதமுள்ள ஐந்து பருவத்துக்கான கட்டணத்தை செலுத்தினால் தான் மூலச்சான்றுகளை தரமுடியும்" என்றது.

"மாணவர் விலகினால், மீதமுள்ள பருவத்துக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும்" என்ற நிபந்தனை விண்ணப்ப படிவத்தில் கூறியிருப்பதை பல்கலை சுட்டிக்காட்டியது. பின், 1.77 லட்சம் ரூபாய்க்கு பதில், 88 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி அந்த மாணவர் சான்றுகளை பெற்றார். தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு மூலம், தஞ்சாவூர் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் 2011ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.

மனுவில், "சான்றுகள் தருவதற்காக பெறப்பட்ட பணத்தையும், கல்லூரிக்கு சென்ற நாட்களை கழித்து, கல்லூரி கட்ட ணத்தில் மீதி கட்டணம் 24 ஆயிரம் ரூபாயை வட்டியுடனும், நஷ்டயீட்டுடனும் திருப்பித்தர வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இரு தரப்பையும் விசாரித்த நுகர்வோர் மன்றம், "மூலச்சான்றுகளை உடனே வழங்க வேண்டும். கல்வி கட்டணம், 36 ஆயிரம் ரூபாயில் கழிவு போக 24 ஆயிரத்தை திருப்பி தர வேண்டும். மூலச்சான்று வழங்குவதற்காக பெறப்பட்ட 88 ஆயிரத்து 500 ரூபாயும் சேர்ந்து 1.12 லட்சத்தை, 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியிலிருந்து, 6 சதவீதம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்" என, 2012ல், உத்தரவிட்டது.

மதுரை மாநில நுகர்வோர் மன்றத்தில், சாஸ்திரா பல்கலை மேல்முறையீடு செய்தது. இரு தரப்பையும் விசாரித்த நீதித்துறை சார்ந்த உறுப்பினர் ஜெயராமன், உறுப்பினர் சம்பந்தமும், பல்கலையின் மேல்முறையீட்டை நிராகரித்து, வட்டியை தவிர 1.12 லட்சம் ரூபாய் மற்றும் மூச்சான்றுகளை உடனே தர வேண்டும் என உத்தரவிட்டு, தஞ்சாவூர் நுகர்வோர்மன்ற தீர்ப்பை உறுதி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us