தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதிய முதுநிலை படிப்புகள் இல்லாத மேட்டூர் கல்லூரி - அவதியில் மக்கள்

போதிய முதுநிலை படிப்புகள் இல்லாத மேட்டூர் கல்லூரி - அவதியில் மக்கள்

போதிய முதுநிலை படிப்புகள் இல்லாத மேட்டூர் கல்லூரி - அவதியில் மக்கள்


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: பெரியார் பல்கலையின் கீழ்வரும் மேட்டூர் கலை, அறிவியல் கல்லூரியில், எம்.காம்., தவிர, வேறு முதுகலை பாடப்பிரிவுகள் இல்லாதது, மாணவர்களையும், பெற்றோர்களையும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

மேட்டூரில், பெரியார் பல்கலையின், கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள், 2006 நவம்பர், 3ம் தேதி துவங்கியது. தற்போது, மேட்டூர் நான்கு ரோட்டில், சொந்த கட்டிடத்தில் இயங்கும் இக்கல்லூரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.எஸ்சி., புவி அமைப்பியல், கணிதம், கணினி அறிவியல், பி.காம்., ஆகிய 7 இளநிலை பாடப்பிரிவு, ஒரு முதுகலை (எம்.காம்.,) பாடபிரிவு மட்டுமே உள்ளது.

கல்லூரியில், நடப்பாண்டு, மேட்டூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த, 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மேட்டூரில், பெரியார் பல்கலை கல்லூரி துவங்கிய பின்பு, சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட்ட, பிற தனியார் கல்லூரிகளில், எம்.ஏ., எம்.காம். எம்.எஸ்சி., என, முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளது.

ஆனால், மேட்டூரில், பெரியார் பல்கலை கல்லூரி துவங்கி, ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை, ஒரு முதுகலை பாடப்பிரிவை தவிர, இதர பாடப்பிரிவுகள் துவங்கவில்லை. அதனால், பி.காம்., படித்த மாணவர்கள் மட்டுமே, கல்லூரியில் தொடர்ந்து, எம்.காம் படிக்கின்றனர். பிற இளங்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பு படிக்க, வெளியிடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளை நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதற்கான வசதிகள் இல்லாததால், பெரும்பாலான மாணவர்கள், இளங்கலை பட்டப்படிப்புடன், தங்களது படிப்பை முடித்துக் கொள்கின்றனர். வசதி படைத்த மாணவர்களே, தனியார் கல்லூரியில், தொடர்ந்து முதுகலை பட்டபடிப்புக்கு செல்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, மேட்டூர் பெரியார் பல்கலை கலைகல்லூரியில், எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி.,க்கான முதுகலை பட்டபடிப்பு பிரிவுகளை துவங்க வேண்டும் என, மேட்டூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us