தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டைனோசர் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு: மாணவ மாணவியரை கவர புது ஏற்பாடு

டைனோசர் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு: மாணவ மாணவியரை கவர புது ஏற்பாடு

டைனோசர் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு: மாணவ மாணவியரை கவர புது ஏற்பாடு


UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM

ADDED : ஜூலை 16, 2014 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM ADDED : ஜூலை 16, 2014 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சி அருகே உள்ள அண்ணா அறிவியல் மையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் டைனோசர் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி - புதுக்கோட்டை ரோட்டில் உள்ள கொட்டப்பட்டில் அண்ணா அறிவியல் மையம் கடந்த 1999ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது அறிவியல் கண்காட்சி, கோளரங்கம் காட்சிகள் மற்றும் முப்பரிமாண காட்சிகள் மூலம் அறிவியல் சார்ந்த ஒளி, ஒலி காட்சிகள் நாள்தோறும் காண்பிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அண்ணா அறிவியல் மையத்தில் இரண்டு ஏக்கரில் டைனோசர் பூங்கா அமைக்க தமிழக அரசு 50 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இதில் 20 அடி முதல் 25 அடி வரை நீளம் கொண்ட 42 டைனோசர்கள் வடிவமைக்கப்படுகிறது. இதில் ஆறு முதல் ஏழு டைனேசர்கள் இயங்கும் தன்மையில் இருக்கும். டைனேசரை தவிர தட்டாம் பூச்சி, தவளை உள்ளிட்ட நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய உயிரினங்களும் வடிவமைக்கப்படுகிறது.

மேலும் அறிவியலின் பரிணாம வளர்ச்சி, ஆரம்ப காலத்தில் பூமியின் நிலை குறித்து விளக்கும் வகையில் பல்வேறு வடிவங்கள் இடம் பெறவுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களை அதிகளவில் அண்ணா அறிவியல் மையத்துக்கு வர வழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குநர் லெனின் தமிழ்கோவன் கூறியதாவது: அண்ணா அறிவியல் மையத்துக்கு பள்ளி மாணவ மாணவியர் வருகை அதிகரித்துள்ளது. மையத்தில் குழந்தைகளுக்கு செய்முறை அறிவியல் பயிற்சி நடத்தப்படுகிறது.

மேலும் ஏர்போர்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் அழைத்து செல்லப்பட்டு, அறிவியல் கல்வி குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. டைனோசர் அமைக்கும் பணிகள் ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை (17ம்தேதி) மையத்தில் அறிவியல் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் அறிவியாலர், டாக்டர்கள் பங்கேற்று அறிவியல் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, முன்னேற்றம் குறித்து பேசுகின்றனர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us