நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள் இணையதளம் மூலம் இணைப்பு
நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள் இணையதளம் மூலம் இணைப்பு
UPDATED : ஆக 02, 2014 12:00 AM
ADDED : ஆக 02, 2014 10:52 AM
சென்னை: "தமிழகத்தின் 13 பல்கலைக்கழங்கள், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள் ஆகியவை இணையதளம் மூலம் இணைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தின், 13 பல்கலைக்கழங்கள், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள் ஆகியவை இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
இதற்காக, அண்ணா பல்கலை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், மின் தொடர்பு நூலக களஞ்சியங்கள், இணையதள வசதியுடன் அமைக்கப்படும்.
பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகள், இந்த இணைய தளத்துடன் இணைக்கப்படும். மின் நூல்கள், இதழ்கள், ஒளிப் படங்களை இதன்மூலம் பதவிறக்கம் செய்யலாம். இத்திட்டம், 1.86 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்
சென்னை அண்ணா பல்கலை முதன்மை வளாகத்தில், இளம் நிலை மாணவ, மாணவியர் விடுதி, சென்னை பொறியியல் கல்லூரி நிர்வாக வளாகம், அக்கல்லூரி மாணவர் விடுதி ஆகியவை 30.70 கோடி ரூபாயில் கட்டப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
