தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ. படித்த பணி அனுபவம் உள்ளோர் அபுதாபி நிறுவனத்தில் சேரலாம்: தமிழக அரசு

ஐ.டி.ஐ. படித்த பணி அனுபவம் உள்ளோர் அபுதாபி நிறுவனத்தில் சேரலாம்: தமிழக அரசு

ஐ.டி.ஐ. படித்த பணி அனுபவம் உள்ளோர் அபுதாபி நிறுவனத்தில் சேரலாம்: தமிழக அரசு


UPDATED : ஆக 04, 2014 12:00 AM

ADDED : ஆக 04, 2014 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2014 12:00 AM ADDED : ஆக 04, 2014 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு வெளிட்ட செய்திக்குறிப்பு: அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு, ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன், ஆறு ஆண்டு பணி அனுபவம் உள்ள சட்டரிங் கார்பெண்டர் மற்றும் ஸ்டீல் பிக்ஸ்சர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பெண்டர், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் தேவைப்படுகின்றனர்.

தகுதி, அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவ காப்புறுதி, மிகை நேர பணி ஊதியமும் வேலை அளிப்போரால் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை, "ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகம், எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை 32" என்ற முகவரியில் உள்ள, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய, 044 2250 2267 என்ற எண்கள் மூலமாகவோ, www.omcmanpoweqõ.com என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us