sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை - நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

/

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை - நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை - நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை - நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு


UPDATED : நவ 15, 2014 12:00 AM

ADDED : நவ 15, 2014 11:09 AM

Google News

UPDATED : நவ 15, 2014 12:00 AM ADDED : நவ 15, 2014 11:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிக்கு நடவடிக்கை எடுக்கும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என ஆக.,8 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தமிழகத்தில் 37ஆயிரத்து 2 பள்ளிகள் உள்ளன. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்ற நிலையில் உள்ளன. கல்வித்துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் அரசு, இவற்றை சரி செய்வதில்லை.

திறந்தவெளியை, கழிப்பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற 2012 ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. நடப்பு ஆண்டில் கல்வித்துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பள்ளிகள் 37 ஆயிரத்து 2. கழிப்பறை இல்லாத பள்ளிகள் 4375, ஆண்கள் பள்ளிகள் 4060. பெண்கள் பள்ளி 898, 1159 ஆண்கள் பள்ளியில் பயனற்ற நிலையில் கழிப்பறைகள் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கழிப்பறை வசதிகளை நிறைவேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு புகார் செய்தேன். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்துதர உத்தரவிட வேண்டும். பயனற்ற கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us