தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு


UPDATED : டிச 24, 2014 12:00 AM

ADDED : டிச 24, 2014 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2014 12:00 AM ADDED : டிச 24, 2014 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளுக்காக பல இடங்களில் அந்தந்த பள்ளிகளில் மையங்கள் அமைக்கின்றனர். வேறு பள்ளிகளில் அமைக்கப்படும் மையங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 5 கி.மீ., பயணித்து தேர்வு எழுதுகின்றனர்.

மாணவர்கள் சிரமம் இன்றி நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதிக தூரம் பயணம் செய்வதால் மனநிலை பாதித்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. மாணவர்கள் படிக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் பி.சுப்பாராஜ் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us