தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான செஸ் போட்டியில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாம்பியன்

மாநில அளவிலான செஸ் போட்டியில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாம்பியன்

மாநில அளவிலான செஸ் போட்டியில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாம்பியன்


UPDATED : பிப் 17, 2015 12:00 AM

ADDED : பிப் 17, 2015 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2015 12:00 AM ADDED : பிப் 17, 2015 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மாநில அளவிலான செஸ் போட்டியில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

தமிழ்நாடு காது கேளாதோர் சதுரங்க விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டி, சென்னை எம்.ஜி.ஆர்., காது கேளாதோர் பள்ளியில், சமீபத்தில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் இருந்து, 4 மாணவர்கள், 4 மாணவியர் பங்கேற்றனர்.

மாணவியர் பிரிவில் அபிநயா முதலிடம், மோகன பிரியா 2ம் இடம். மாணவர் பிரிவில், சிவராஜ் 2ம் இடம், மயிலைநாதன் 3ம் இடம் வென்றனர். இத்தொடரில், 21 புள்ளிகள் பெற்று, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இவர்களை திருப்பூர் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ், நிர்வாகி முருகசாமி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us