தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.இ.இ., - நீட் தேர்வுகள் தொடர்பாக மாணவர் கருத்தை கேளுங்கள்: சோனியா

ஜே.இ.இ., - நீட் தேர்வுகள் தொடர்பாக மாணவர் கருத்தை கேளுங்கள்: சோனியா

ஜே.இ.இ., - நீட் தேர்வுகள் தொடர்பாக மாணவர் கருத்தை கேளுங்கள்: சோனியா


UPDATED : ஆக 29, 2020 12:00 AM

ADDED : ஆக 29, 2020 09:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2020 12:00 AM ADDED : ஆக 29, 2020 09:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஜே.இ.இ., - நீட் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, மாணவர்களின் கருத்தை, மத்திய அரசு கேட்டறிய வேண்டும் என, காங்., தலைவர், சோனியா கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான, அகில இந்திய நுழைவு தேர்வான, &'நீட்&' மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மெயின் தேர்வுகள், செப்டம்பரில் நடைபெற உள்ளன. கொரோனா பரவல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளால், இத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆர்ப்பாட்டம்

ஆனால், மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன், தேர்வுகள் நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, &'ஜே.இ.இ., - நீட்&' நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவினை, மறுசீராய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆறு முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்றத்தை நேற்று அணுகியுள்ளனர்.
இத்தேர்வுகளுக்கு எதிராக, காங்கிரஸ் தரப்பில், டில்லியில், மத்திய அரசின் கல்வி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள, சாஸ்திரி பவன் மற்றும் நாடு முழுதும், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், சமூக ஊடகங்களில், எதிர்ப்பு பிரச்சாரங்களை பதிவிடும், போராட்டமும் காங்., தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக, காங்., தலைவர், சோனியா வெளியிட்டுள்ள, &'வீடியோ&'வில் கூறியுள்ளதாவது: மாணவர்களாகிய நீங்கள், மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளீர்கள் என்பதை உணர்கிறேன். உங்களுக்கான தேர்வுகளை எப்போது நடத்த வேண்டும் என்பது, உங்களுக்கு மட்டுமின்றி, உங்கள் குடும்பத்திற்கும், மிக முக்கிய பிரச்னை.
ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்க, எங்களின் எதிர்காலமான மாணவர்களை, நாங்கள் நம்பியுள்ளோம். எனவே, தேர்வுகள் நடத்தும் பிரச்னையில், மத்திய அரசு மாணவர்களின் ஒப்புதலுடன், முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

காங்., முன்னாள் தலைவர், ராகுல் வெளியிட்டுள்ள &'வீடியோ&'வில் கூறியுள்ளதாவது: 

மாணவர்களாகிய நீங்கள், இந்த நாட்டை, புதிய உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறவர்கள். கடந்த, மூன்று அல்லது நான்கு மாதங்களில், நாட்டில் என்ன நடந்தது என்பது, அனைவருக்கும் புரிகிறது.
மோசமான நிலைகொரோனா பரவலை தவறாக கையாண்டதால், நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதார சீரழிவும் உருவாகி, நாடு மோசமான நிலையில் இருப்பதை, அனைவரும் உணர்கின்றனர். இப்போது, அந்த வலியை, ஏன் மாணவர்கள் மீது சுமத்துகிறார்கள் என்பது புரியவில்லை.
தேர்வுகள் தொடர்பாக, மாணவர்களுடன் ஆலோசனை நடத்தி, ஒருமித்த கருத்து உருவான பின், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us