தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரியர் தேர்வு ரத்து முடிவு நிறுத்தி வைப்பு; சட்ட பல்கலை திடீர் அறிவிப்பு

அரியர் தேர்வு ரத்து முடிவு நிறுத்தி வைப்பு; சட்ட பல்கலை திடீர் அறிவிப்பு

அரியர் தேர்வு ரத்து முடிவு நிறுத்தி வைப்பு; சட்ட பல்கலை திடீர் அறிவிப்பு


UPDATED : அக் 11, 2020 12:00 AM

ADDED : அக் 11, 2020 10:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2020 12:00 AM ADDED : அக் 11, 2020 10:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, அனைத்து கல்லுாரிகளின் செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும், இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது.
சுரப்பா எதிர்ப்பு

மேலும், அரியர் எழுத வேண்டிய மாணவர்களுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டு, &'ஆல் பாஸ்&' வழங்கப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்து, தேர்வையும் நடத்தியது. இது குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில், அண்ணா பல்கலைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை சுரப்பாவும், தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், தமிழக அரசின் அரியர் தேர்ச்சி குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பதிவாளர் ஆபிரகாம் அனுப்பிய சுற்றறிக்கை:

அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தாமல், அவர்களின் அக மதிப்பீட்டை வைத்து, தேர்ச்சி அறிவிப்பது தொடர்பாக, அகில இந்திய பார் கவுன்சிலிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
கடிதம்

இதற்கு பார் கவுன்சில் செயலர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்த விவகாரம், அகில இந்திய பார் கவுன்சிலின் பொது கவுன்சில் கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.எனவே, அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல், தேர்ச்சி வழங்குவது குறித்து, முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us