இட ஒதுக்கீடு என்ற உயிர் தண்ணீர் இல்லாவிட்டால் மருத்துவ படிப்பில் சேர முடியாது
இட ஒதுக்கீடு என்ற உயிர் தண்ணீர் இல்லாவிட்டால் மருத்துவ படிப்பில் சேர முடியாது
UPDATED : அக் 19, 2020 12:00 AM
ADDED : அக் 19, 2020 12:03 PM
சென்னை:
&'அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், ஒருவர் கூட மருத்துவ படிப்பில் சேர முடியாது&' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், நீட் தேர்வு விவகாரத்தில், அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்கின்றனர்; அவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டதால், எந்த சலுகையும் தேவையில்லை. இப்படி திட்டமிட்டு, ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்படும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவுகள் கருகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. எனவே, 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற உயிர் தண்ணீர் உடனே ஊற்றப்படாவிட்டால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவ படிப்பில் சேர முடியாது.
நடப்பாண்டில், 1,615 அரசு பள்ளி மாணவர்கள், &'நீட்&' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவர்கள் அனைவருக்கும் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்து விடாது. விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில், தீர்மானிக்கப்படவுள்ள குறைந்தபட்ச தகுதியான, &'கட் - ஆப்&' மதிப்பெண் எடுத்தவர்கள்மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர முடியும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
&'தற்கொலை முயற்சி வேண்டாம்&'
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:
&'நீட்&' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல், செஞ்சி மாணவி ரம்யா தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, வேதனை அளிக்கிறது.
&'நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி பெறுவதே தீர்வு; தற்கொலை தீர்வு அல்ல. கடந்த சில ஆண்டுகளில், ௧௩ மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இன்னும் எத்தனை பேரின் உயிரை, நீட் காவு வாங்கப் போகிறதோ; நீட் தேர்வு முடிவுகளுக்காக, மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
