UPDATED : டிச 05, 2009 12:00 AM
ADDED : டிச 05, 2009 01:19 PM
அ நிறம் | அளவு
கல்லூரி மாணவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மூலம், அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை பெற, மாணவர்கள் உரிய படிவம் பெற்று ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகளுடன் கல்லூரி நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்லூரி நிர்வாகம் மூலம், தகுதியுள்ள விண்ணப்பங்கள் பிற்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறைக்கு பரிந்துரைக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பி, நிதி ஒதுக்கீடு பெற்றதும் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் மூலம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
தற்போது, இந்த நடைமுறையில் மாற்றம் செய்து, ஆன்- லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் மூலம் பெற்றப்படும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள், ஆன்- லைனில் பதிவு செய்யப்படும். பிற்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ளவை அரசுக்கு அனுப்பப்படும். அரசு நிதி ஒதுக்கியதும், மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விவரம்,
ஆன்-லைனில் வெளியிடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும், உதவித் தொகை விண்ணப்பத்தை புதுப்பிக்கவும், இதே நடைமுறை பின்பற்றப்படும். கல்வி உதவித் தொகை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, மாணவர்களுக்கு தனித்தனியே ஐ.டி., எண்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக கலை மற்றும் அறிவியல், தொழிற் படிப்பு கல்லூரி மாணவர்களின் கல்வி உதவித் தொகை விண்ணப்ப விவரங்கள், ஆன்-லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
