தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சானிட்டரி கழிவில் மறுசுழற்சி பொருள் தயாரிக்கும் இயந்திரம்: இன்ஜி., கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு

சானிட்டரி கழிவில் மறுசுழற்சி பொருள் தயாரிக்கும் இயந்திரம்: இன்ஜி., கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு

சானிட்டரி கழிவில் மறுசுழற்சி பொருள் தயாரிக்கும் இயந்திரம்: இன்ஜி., கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு


UPDATED : நவ 04, 2023 12:00 AM

ADDED : நவ 04, 2023 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2023 12:00 AM ADDED : நவ 04, 2023 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
மதுரை காமராஜர் பல்கலையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம், தொழில் முனைவோர் வளர்ச்சி மையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கண்டுபிடிப்பு, புதுமைப்புனையும் போட்டி நடந்தது. மாநில அளவில் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று புதிய கண்டுபிடிப்புகளை சமர்பித்தனர். ஆயிரம் கண்டுப்பிடிப்புக்கான திட்டங்கள் முதல் சுற்றிலும், இவற்றில் 100 இரண்டாம் சுற்றுக்கும், 25 கண்டுபிடிப்புகள் மூன்றாம் சுற்றுக்கும் தேர்வு செய்தனர்.இதில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி இயந்திரவியல் துறை மாணவர் உதயா என்பவர் சானிட்டரி கழிவுகளை, மறுசுழற்சி செய்து அதனை மீண்டும் பேப்பர், பல்பு கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கும் வகையில் கண்டுபிடித்தார்.இது மாநில அளவில் ஐந்தாவது இடமும், மதுரை மண்டலத்தில் முதலிடம் பெற்றது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான பரிசு வழங்கும் விழா சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது. இதில் மாணவர் உதயாவிற்கு, அமைச்சர் த.மோ.அன்பரசன், ரூ.1 லட்சத்திறகான செக் வழங்கினார்.இதற்கான பாராட்டு விழா கல்லுாரியில் நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச் செயலாளர் நவீன்ராம், முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், இயந்திரவியல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us