தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


UPDATED : நவ 19, 2023 12:00 AM

ADDED : நவ 19, 2023 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2023 12:00 AM ADDED : நவ 19, 2023 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மே மாதம் கோடை விடுமுறையில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 2023 மே மாதம் நடத்தப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மட்டும் நடத்தப்பட்டது. மற்ற பணியிட மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட உள்ள சூழலில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட பணி மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு இடையில் நிறுத்தப்பட்டது. பணியிட மாறுதலுக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆயத்த பணிகள் நடக்கிறது.தமிழக அரசு பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என கொள்கை முடிவு எடுக்க ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. பதவி உயர்வில் ஒரு தீர்க்கமான நிரந்தர முடிவை அரசு எடுக்க வேண்டும். அதே வேளையில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் உள்ளிட்ட பிற பணியிட மாறுதல்களை உடனடியாக நடத்த வேண்டும். பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்த பின் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us