திருப்போரூர் பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட சப் - கலெக்டர்
திருப்போரூர் பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட சப் - கலெக்டர்
UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 04:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.செங்கல்பட்டு உதவி கலெக்டர் ஆனந்த்குமார் சிங், பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டத்தை, நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். சமையல் அறைகளை பார்வையிட்டார்.இதேபோல், தினசரி சூடாகவும், மாணவர்கள் விரும்பும் வகையில் சுவையாகவும் சமைத்து வழங்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, பண்டிதமேடு கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் மையம், திருப்போரூர் பேருந்து நிலைய வளாக பகுதிகளை, உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.