தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
UPDATED : ஜூன் 30, 2024 12:00 AM
ADDED : ஜூன் 30, 2024 11:22 PM

சென்னை:
மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழக சட்ட பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை கடிதத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன்.
தொழில்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12 ம்வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். தனி நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்க கூடாது. நீட் முறை மாணவர்களுக்கு தேவையற்ற கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழக மக்களின் கருத்து.தேசிய அளவில் நீட் தேர்வு முறையை கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும் 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தவும் வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த சட்ட முன்வடிவு நிலுவையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
நீட் தேர்வு முறைகேடுகள் நீட்தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவிற்கு மத்தியஅரசு ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.