sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நேரடி பணி நியமன முடிவை கைவிட்டது அரசு; கூட்டணி கட்சிகள் அழுத்தத்தால் மனமாற்றம்

/

நேரடி பணி நியமன முடிவை கைவிட்டது அரசு; கூட்டணி கட்சிகள் அழுத்தத்தால் மனமாற்றம்

நேரடி பணி நியமன முடிவை கைவிட்டது அரசு; கூட்டணி கட்சிகள் அழுத்தத்தால் மனமாற்றம்

நேரடி பணி நியமன முடிவை கைவிட்டது அரசு; கூட்டணி கட்சிகள் அழுத்தத்தால் மனமாற்றம்


UPDATED : ஆக 21, 2024 12:00 AM

ADDED : ஆக 21, 2024 10:48 AM

Google News

UPDATED : ஆக 21, 2024 12:00 AM ADDED : ஆக 21, 2024 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணியில் உள்ள தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை ரத்து செய்யும்படி, யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த விளம்பரம் ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசின் 24 அமைச்சகங்களுக்கான இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் உட்பட 45 பதவிகளுக்கான பணி நியமனங்களை நேரடியாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பத்திரிகை விளம்பரம், கடந்த 17ம் தேதி வெளியானது.

எதிர்ப்பு

பொதுவாக இந்த பணிகளில் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அல்லது குரூப் - ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது வழக்கம். மாறாக, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நேரடி பணி நியமனம் செய்யும் இந்த நடைமுறைக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடிதம்


லோக் ஜனசக்தி ராம்விலாஸ் பஸ்வான் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான், அனைத்து அரசு பணி நியமனங்களும் இடஒதுக்கீட்டு நடைமுறையின்படி தான் நடக்க வேண்டும் என, தெரிவித்தார்.

இதையடுத்து, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ப்ரீத்தி சுதனுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் இணை செயலர், இயக்குனர்கள் மற்றும் துணை செயலர்கள் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்வது தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று யு.பி.எஸ்.சி., சமீபத்தில் விளம்பரம் செய்திருந்தது.

இந்த நேரடி நியமன நடைமுறை என்பது, 2005ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய ஆட்சிப்பணி சீரமைப்புக் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், 2013ல் அமைக்கப்பட்ட ஆறாவது சம்பளக் குழுவும் அரசு உயர் பதவிகளுக்கான நேரடி நியமனம் தொடர்பாக, இதேபோன்ற ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தது.

இந்த பரிந்துரைகளுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, மத்திய அரசின் பல்வேறு உயர்மட்ட பதவிகளுக்கு நேரடி நியமனங்கள் பலமுறை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய அரசுகள் கூட பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கான செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி நியமனங்களை செய்துள்ளன.

அந்த நியமனங்களின் போது, இடஒதுக்கீட்டுக்கான வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. இது தவிர, நேஷனல் அட்வைசரி கவுன்சில் என்ற பெயரில், தேசிய அறிவுரைக்குழு அமைக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தையே கட்டுப்படுத்தக்கூடிய அளவில் சூப்பர் அதிகார மையமாக செயல்பட்டது.

அந்த கவுன்சிலுக்கான உறுப்பினர்கள் கூட, இதே போன்று நேரடியாகத்தான் நியமிக்கப்பட்டனர். 2014க்கு முன், அரசுப் பதவிகளில் நிறைய நேரடி நியமனங்கள் நடந்தன. அவை அனைத்துமே எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல், இடஒதுக்கீட்டின் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் அந்தந்த நேரத்து சூழ்நிலைகள், அவரவர் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடந்தன.

இருப்பினும், அதன்பின் அமைந்த தற்போதைய அரசு, நிர்வாக ரீதியில் திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், எந்தவித ஒளிவுமறைவு இன்றியும் பணி நியமனங்களை செய்து வருகிறது.

மேலும், அரசு பதவிகளுக்கான நேரடி நியமனங்கள் அனைத்தும், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சமூகநீதி உள்ளிட்ட முக்கிய அம்சங்களுக்கு விரோதமின்றி நடக்கின்றன. இடஒதுக்கீட்டு நடைமுறைக்கு எதிரானதாக இருந்துவிடக்கூடாது என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார்.

அரசு மற்றும் பொதுத் துறைகளில் நடக்கும் வேலை வாய்ப்பு, நம் சமூகநீதி அமைப்புக்கான மிக முக்கியமான அடித்தளம் என பிரதமர் கருதுகிறார்.

சமூக நீதிக்கான அரசியலமைப்பு உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. அவ்வாறு செய்வதன் வாயிலாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை அரசுப் பணிகளில் பெற முடியும்.

எனவே, மத்திய அரசு அதிகாரிகளுக்கான நேரடி பணி நியமனம் தொடர்பாக விண்ணப்பிக்க, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பதவிகள் அனைத்துமே இட ஒதுக்கீட்டு வரையறைக்கு உகந்தவை அல்ல. அவை, அந்த துறைக்கு என்றே தனித்துவமும், சிறப்பம்சமும் வாய்ந்த பதவிகள் ஆகும்.

பிரதமரின் சமூக நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில், இந்த பதவிகளின் தன்மை குறித்தும் இப்பிரச்னையின் பின்னணி அம்சங்கள் குறித்தும் மறுசீராய்வு செய்வது அவசியம்.

எனவே, நேரடி பணி நியமனம் குறித்து கடந்த 17ம் தேதி வெளியான விளம்பரத்தை யு.பி.எஸ்.சி., ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சமூகநீதி மற்றும் சமூகத்தில் பின் தங்கியுள்ளோரை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக இது அமையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த விளம்பரத்தை ரத்து செய்வதாக, யு.பி.எஸ்.சி., தரப்பில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கள்ள மவுனம்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவு:


அரசியலமைப்பு சட்டத்தையும், இட ஒதுக்கீட்டு முறையையும் எப்பாடு பட்டாவது பாதுகாப்போம். நேரடி பணி நியமனம் உள்ளிட்ட பா.ஜ.,வின் சதி திட்டங்களை முறியடிப்போம். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி, ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவு:

அரசியலமைப்பு சட்டத்தையும், இட ஒதுக்கீட்டு முறையையும் எப்பாடு பட்டாவது பாதுகாப்போம். நேரடி பணி நியமனம் உள்ளிட்ட பா.ஜ.,வின் சதி திட்டங்களை முறியடிப்போம். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி, ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறுகையில், நேரடி பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற்ற பிரதமருக்கு நன்றி. இந்த அரசு முன்னுதாரணமாக திகழ்கிறது. எதிர்காலத்திலும் மக்களின் உணர்வுகளுக்கு இதே போல மதிப்பளிக்கும் என நம்புகிறேன்.

இப்போது எங்கள் மீது குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சிகள், ஆட்சியில் இருந்தபோது எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.,க்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாதது ஏன்? இவர்கள் எப்போதுமே சில விஷயங்களுக்கு மட்டுமே வாய் திறக்கின்றனர். மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் படுகொலை விவகாரத்தில் மட்டும் இவர்கள் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us