மாணவர்களுக்கு தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துக்கள் கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துக்கள் கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு
UPDATED : அக் 03, 2024 12:00 AM
ADDED : அக் 03, 2024 08:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:
சென்னை புறநகர் பகுதிகளில், மாணவர்களுக்கு தாராளமாக போதை வஸ்துக்கள் கிடைக்கிறது. இதனால், அவர்கள் தடம்மாறுகின்றனர் என, கிராம சபை கூட்டத்தில் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தாம்பரம் அடுத்த கவுல்பஜார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு மர்ம நபர்களால் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இதனால், இதை கட்டுப்படுத்தும் விதமாக, மாலை நேரத்தில் பள்ளிக்கு போலீசார் ரோந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.