கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆர்.ஐ.டி., - ரஷ்ய பல்கலை ஒப்பந்தம்
கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆர்.ஐ.டி., - ரஷ்ய பல்கலை ஒப்பந்தம்
UPDATED : பிப் 05, 2026 09:07 PM
ADDED : பிப் 05, 2026 09:08 PM
சென்னை:
உலகளவில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆர்.ஐ.டி., என்ற ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரஷ்யாவின் எச்.எஸ்.இ., பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்வில், ராஜலட்சுமி குழும துணை தலைவர் டாக்டர் ஹரி சங்கர் மேகநாதன், எச்.எஸ்.இ., பல்கலை துணைவேந்தர் அன்னா டி ஷெட்ஸ்காயா, துணை தலைவர் மனோஜ் சர்மா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ஆர்.ஐ.டி., நிறுவனம் தன் கல்விச் சேவையை, சர்வதேச எல்லைகளை கடந்து விரிவுப்படுத்த முடியும்.
விழாவில், ராஜலட்சுமி கல்வி குழு துணை தலைவர் ஹரிசங்கர் மேகநாதன் பேசுகையில், “எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்தவும், உலகளாவிய கல்வி தரத்தில் நிறுவனத்தை உயர்த்தவும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலையுடன், இது போன்ற ஒப்பந்தங்கள் உருவாக்குவது அவசியம்,” என்றார்.
ரஷ்யாவின் எச்.எஸ்.இ., பல்கலை துணைவேந்தர் அன்னா டி ஷெட்ஸ்காயா பேசுகையில், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான, கல்வி சிறப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது,” என்றார்

