sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாநில அரசு உள் இடஒதுக்கீட்டில் எஸ்.சி., - பி பிரிவுக்கு அநீதி

/

மாநில அரசு உள் இடஒதுக்கீட்டில் எஸ்.சி., - பி பிரிவுக்கு அநீதி

மாநில அரசு உள் இடஒதுக்கீட்டில் எஸ்.சி., - பி பிரிவுக்கு அநீதி

மாநில அரசு உள் இடஒதுக்கீட்டில் எஸ்.சி., - பி பிரிவுக்கு அநீதி


UPDATED : மார் 24, 2026 11:11 AM

ADDED : மார் 24, 2026 11:13 AM

Google News

UPDATED : மார் 24, 2026 11:11 AM ADDED : மார் 24, 2026 11:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
உள் இடஒதுக்கீட்டில் எஸ்.சி., - பி பிரிவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக ஆதிதிராவிட மகாஜன சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து, ஆதிதிராவிட மகாஜன சபையின் மூத்த தலைவர் சம்பத் ராஜ் கூறியதாவது:

கர்நாடக அரசு உள் இடஒதுக்கீட்டில் பட்டியலின சமூகத்தின் எஸ்.சி., - ஏ பிரிவுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், எஸ்.சி., - பி பிரிவில் உள்ள தமிழ் பேசும் ஆதிதிராவிடர், பறையர், வள்ளுவர் உள்ளிட்ட ஜாதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

இதனால், 1.5 கோடி பேரின் கல்வி, வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக தமிழ் ஆதிதிராவிடர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் கற்கும் உரிமையும், ஊக்கத்தொகையும், அரசு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும் அவல நிலை ஏற்படும்.

இதை கண்டித்து, எஸ்.சி., - பி பிரிவில் உள்ள மற்ற ஜாதிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us