sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டிஜிட்டல் தளங்களில் தகவல்களை பகிரும் முன் சரிபாருங்கள் மாணவர்களுக்கு தேர்தல் துறை வேண்டுகோள்

/

டிஜிட்டல் தளங்களில் தகவல்களை பகிரும் முன் சரிபாருங்கள் மாணவர்களுக்கு தேர்தல் துறை வேண்டுகோள்

டிஜிட்டல் தளங்களில் தகவல்களை பகிரும் முன் சரிபாருங்கள் மாணவர்களுக்கு தேர்தல் துறை வேண்டுகோள்

டிஜிட்டல் தளங்களில் தகவல்களை பகிரும் முன் சரிபாருங்கள் மாணவர்களுக்கு தேர்தல் துறை வேண்டுகோள்


UPDATED : மார் 28, 2026 05:13 PM

ADDED : மார் 28, 2026 05:16 PM

Google News

UPDATED : மார் 28, 2026 05:13 PM ADDED : மார் 28, 2026 05:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
தேர்தல் வினாடி வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்புத் திட்டமான ஸ்வீப் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நடந்தது.

தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நேர்மையான வாக்காளர், ஓட்டு போடுதல் குறித்து கலந்துரையாடினார்.

தேர்தல் காலத்தில் பரப்பப்படும் தவறான தகவல்கள், திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரசாரங்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை சரிபார்க்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தாத தேர்தல் தகவல்கள் பரவினால் அவற்றை சரிபார்க்க 93633 88755 என்ற தேர்தல் துறையில் வாட்ஸ் அப் எண்ணில் மாணவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டது.

டிஜிட்டல் தளங்களில் தகவல்களை பகிரும் முன், நிறுத்து, சரிபார், பிறகு செயல்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு தேர்தல் துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்தல் தொடர்பாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us