sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 22, 2026 ,சித்திரை 9, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உண்மை பேசுவதால் தினமலர் நாளிதழை பிடிச்சிருக்கு: கள்ளம் கபடமின்றி நெகிழ்ச்சியாக பேசிய பாலாஜி

/

உண்மை பேசுவதால் தினமலர் நாளிதழை பிடிச்சிருக்கு: கள்ளம் கபடமின்றி நெகிழ்ச்சியாக பேசிய பாலாஜி

உண்மை பேசுவதால் தினமலர் நாளிதழை பிடிச்சிருக்கு: கள்ளம் கபடமின்றி நெகிழ்ச்சியாக பேசிய பாலாஜி

உண்மை பேசுவதால் தினமலர் நாளிதழை பிடிச்சிருக்கு: கள்ளம் கபடமின்றி நெகிழ்ச்சியாக பேசிய பாலாஜி


UPDATED : மார் 31, 2026 08:55 PM

ADDED : மார் 31, 2026 08:57 PM

Google News

UPDATED : மார் 31, 2026 08:55 PM ADDED : மார் 31, 2026 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
“உண்மையே பேசுறதுனால எனக்கு தினமலர் நாளிதழை பிடிச்சிருக்கு,” என்று, கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வந்த, 79 வயது முதியவர், கள்ள கபடமின்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் தினமலர் அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, கடபகெரேயில் வசிக்கும் பாலாஜி, 79, மகள் தேன்மொழி, 38, பேரன் அஸ்வின் குமார், 10, பேத்தி அக் ஷரா, 3 ஆகியோருடன் வந்தார். வரலாறு தொடர்பான புத்தகங்களை பாலாஜியும், ஆங்கில புத்தகங்களை அஸ்வினும் ஆர்வமாக புரட்டி பார்த்து படித்தனர்.

பின், கள்ள கபடமின்றி சிறு குழந்தை போல பாலாஜி கூறியதாவது:


ஐயா, என்னோட சொந்த ஊரு வேலுார் மாவட்டம் ஆம்பூர். இங்க வந்து, 23 வருஷம் ஆயிடுச்சு. மகன் வீட்டுல தான் இருக்கேன். வயசானாலும் உழைக்கணும்னுகுற ஆர்வம் என்னை விட்டு போகல. ஒரு அப்பார்மென்ட்ல தோட்ட வேலை பார்க்கிறேன். சின்ன வயசுல இருந்து, 1984 வரை தினமலரை தவிர நிறைய தமிழ் பத்திரிகை படிச்சிருக்கேன்.

அதுக்கு அப்புறமா, இப்போ வர தினமலர தவிர, வேறு எந்த பத்திரிகையும் படிச்சதே இல்ல. என்னன்ன தெரியல ஐயா... உங்க பத்திரிகையில ஏதோ காந்த சக்தி இருக்குது. நான் தென்னை மரத்துல ஏறி, கள் இறக்குற தொழில் நிறைய வருஷம் பண்ணி இருக்கேன்.

சுத்தமான கள் தான், வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து இருக்கேன். ஆனா இப்போ எல்லாரும் ஏமாத்துறாங்க. அதை பார்க்க வருத்தமா இருக்கு. இப்போ யாருமே உண்மையை பேசுறது இல்ல.

ஆனால், மக்கள் முன்னாடி உண்மைய பேசுறதுனாலயும், உண்மையான செய்திய கொடுக்குறதுனாலயும் தான், தினமலர் நாளிதழை பிடிச்சிருக்கு. தினமலரோட வளர்ச்சி தான், தமிழர்களோட எழுச்சி.

நுாலகத்துக்கு ரொம்ப நாளுக்கு முன்னாடியே வரணும்னு நினைச்சேன். என்ன பண்ணறது எனக்கு வயசாகி போச்சு. தனியா வர முடியாது.

ஒரு வழியா இன்னைக்கு மகள், பேரன், பேத்தியை கூட்டிட்டு வந்துட்டேன். இங்கு எல்லா புத்தகமும் நல்லா இருக்கு. நல்ல முயற்சி எடுத்து இருக்கீங்க. உங்க நிர்வாகத்துக்கு நான் நன்றி சொன்னதா சொல்லிடுங்க. ரொம்ப சந்தோஷமாக இங்கிருந்து போறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us