sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வி கடனுக்காக பான் கார்டு அவசியம்; மாணவர்களுக்கு வங்கி ஆலோசகர் விருதாசலம் அட்வைஸ்

/

கல்வி கடனுக்காக பான் கார்டு அவசியம்; மாணவர்களுக்கு வங்கி ஆலோசகர் விருதாசலம் அட்வைஸ்

கல்வி கடனுக்காக பான் கார்டு அவசியம்; மாணவர்களுக்கு வங்கி ஆலோசகர் விருதாசலம் அட்வைஸ்

கல்வி கடனுக்காக பான் கார்டு அவசியம்; மாணவர்களுக்கு வங்கி ஆலோசகர் விருதாசலம் அட்வைஸ்


UPDATED : ஏப் 05, 2026 04:52 PM

ADDED : ஏப் 05, 2026 04:53 PM

Google News

UPDATED : ஏப் 05, 2026 04:52 PM ADDED : ஏப் 05, 2026 04:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி கடனை வங்கிகளில் இருந்து பெறும் வழிமுறைகள் குறித்து வங்கி ஆலோசகர் விருதாசலம் பேசியதாவது: மாணவர்கள் பணம் இல்லை என்ற காரணத்திற்காக படிப்பினை நிறுத்திவிட்டு வேறுவேலைக்கு போக கூடாது என்பதற்கான கல்வி கடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இதனை கொண்டு வந்துள்ளது. எந்த படிப்பிற்கும் அந்த படிப்பிற்கான சேர்க்கை கடிதத்துடன் வங்கியை அணுகி கல்வி கடன் பெறலாம். ஆனால், அங்கீகாரம் இல்லாத படிப்பினை தேர்வு செய்தால் கல்வி கடன் கிடைக்காது.

அட்மிஷன் கட்டணம், டியூன் கட்டணம், ஸ்பெஷல் கட்டணம், தேர்வு கட்டணம் என எந்த கல்வி செலவிற்கும் வரையறைக்குட்பட்டு கல்வி கடன் கேட்க முடியும். முன்பெல்லாம் இந்தியாவில் உள்ள படிப்புகளுக்கு 10 லட்சம் வரை தான் கல்வி கடன் உண்டு.

இதுவே வெளிநாடு என்றால் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இப்போது அந்த உச்சவரம்பு நீக்கிவிட்டனர். படிப்பிற்கு 50 லட்சம் ரூபாய் செலவு என்றாலும், அதற்கும் கல்வி கடன் வாங்க முடியும். 4 லட்சம் வரை கல்வி கடன் வாங்கினால் எந்த பினைய பங்களிப்பு செலுத்த தேவையில்லை. முழு தொகையும் வாங்கி கொள்ளலாம்.

ஒருவேளை 6 லட்சம் ரூபாய் கல்வி கடன் என்றால் 5 சதவீதமாக 30 ஆயிரம் ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். மீதமுள்ள 5.50 லட்சம் வங்கி கடன் பெறலாம்.

அதற்கான 30 ஆயிரம் ரூபாய் பங்களிப்பினை முதலாமாண்டில் முழுவதுமாக கூட கொடுக்க தேவையில்லை. ஆண்டுதோறும் 7,500 ரூபாய் பங்களிப்பாக நான்கு ஆண்டிற்கு செலுத்த வேண்டி இருக்கும். ரூ.7.5 லட்சம் வரை வாங்க கூடிய கடனுக்கு செக்யூரிட்டி கிடையாது.

அதற்கு மாணவரின் தந்தை அல்லது தாயார் கையெழுத்திட்டால் போதும். ரூ.7.5 லட்சத்திற்கு மேல் என்றால் வீட்டுமனை, காம்பளஸ்க் என செக்யூரிட்டி கொடுக்க வேண்டி இருக்கும். அதற்காக வீட்டினை காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பத்திரம் மட்டும் தான் வங்கிக்கு போகும். கடனை கட்டிய பிறகு பத்திரத்தை மீட்டு கொள்ளலாம்.

பெண் குழந்தையை படிக்க வைத்தால் வட்டியில் அரை சதவீதம் குறைவு. பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருந்தால் சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்துகின்றது.

கல்வி கடன் பெறுவதாக இருந்தால் மாணவர்களுக்கு பான் கார்டு எடுக்க வேண்டியது அவசியம். கல்வி கடன் மாணவர்களுக்கு கையில் கொடுக்கப்படாது. நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு தான் வங்கி செலுத்தும். படிப்பு முடித்த பிறகு ஓராண்டிற்கு கால அவகாசம் உண்டு. அதன் பிறகு கல்வி கடனை செலுத்த ஆரம்பிக்கலாம். 15 ஆண்டும் வரை கல்வி கடனை திருப்பி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us